சென்னை தி நகரில் திக் திக்.. 4-வது மாடியில் இருந்து குதிக்க பாய்ந்த இளம்பெண்! கடவுளாய் வந்த பெண் காவல் உதவி ஆய்வாளர்
சென்னை: சென்னை தியாகராய நகரில் காதல் தோல்வியால் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியின் ஜன்னல் வழியாக குதிக்க முயன்ற 27 வயது இளம்பெண்ணை பெண் காவல் உதவி ஆய்வாளர் காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்கொலை செய்ய முயன்ற இளம்பெண்ணை பெண் காவலர் சாதுர்யமாக பேசி காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள 4 மாடி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 4 வது மாடியில் 27 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று திடீரென அந்த இளம்பெண் ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக கூறினார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

4 வது மாடியில் இருந்து குதிப்பதாக
இதையடுத்து அப்பகுதியினர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது பெண் உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் அந்த இளம்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு விடுத்து அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார். தொடர்ந்து சாதுர்யமாக பேசிய அவர் நைசாக அந்த வீட்டின் மாடிக்கு சென்றார்.
இணையத்தில் பரவும் வீடியோ
பின்னர் இளம்பெண்ணிடம் தற்கொலை முடிவு தவறானது என்று கூறி அவரை மாடியில் இருந்து பத்திரமாக கீழே இறக்கி அழைத்து வந்தார். இதனால் அந்த இளம்பெண் உயிர் பிழைத்துள்ளார். குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். முன்னதாக அந்த இளம்பெண் கீழே குதித்துவிடுவதாக கூறி ஜன்னலுக்கு வெளியே நின்ற வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அந்த வீடியோவில், அடுக்குமாடி குடியிருப்பின் 4 வது மாடியில் உள்ள வீட்டில் இருந்து இளம்பெண் ஜன்னல் வழியாக கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்ததும், கீழே நின்ற போலீசார், தீயணைப்புத் துறையினர் அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டிருக்கும் வீடியோ பதிவாகியிருந்தது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காதல் தோல்வி காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. எனினும் இக்கட்டான நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்டு இளம்பெண்ணின் மனதை மாற்றிய பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
தற்கொலை தீர்வு அல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை ஒரு தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண் e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications