பெண்கள் + குழந்தைகள்.. முத்து முத்தாக ஸ்டாலின் கொண்டு வந்த 4 திட்டம்.. திமுக எடுத்த பிரம்மாஸ்திரம்!
சென்னை: வருகின்ற லோக்சபா தேர்தலில் 4 முக்கியமான திட்டங்களை முன்னிறுத்தி திமுக தேர்தல் பிரச்சாரங்களை செய்யும் என்று அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
'இந்தியாவில் லோக்சபா தேர்தல் இந்த முறை முன்கூட்டியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் மே மாதம் தேர்தல் நடக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக ஜனவரி மாதம் அல்லது டிசம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த லோக்சபா தேர்தலுக்கு இப்போதே திமுக தயாராக தொடங்கி உள்ளது. திமுக அளவிலான தமிழ்நாடு கூட்டணி ஆலோசனை விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் 4 முக்கியமான திட்டங்களை முன்னிறுத்தி திமுக தேர்தல் பிரச்சாரங்களை செய்யும் திட்டத்தில் இருக்கிறதாம். அவை என்னென்ன திட்டங்கள் என்று பார்க்கலாம்.
திட்டம் 1 - கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இன்று தொடங்க உள்ளது. இன்றில் இருந்து 1.06 கோடி பேருக்கு தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் நேரடியாக அரசிடம் இருந்து மக்கள் உதவித்தொகை பெறும் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
திட்டம் தொடங்கப்பட்டு பெரும்பாலும் 2 நாட்களில் அதாவது செப்டம்பர் 18ம் தேதிக்குள் மாத தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். இன்று ரூபாய் 1 மெசேஜ் அனுப்பி வங்கி கணக்குகள் சோதனை செய்யப்படும். நேற்றே பலருக்கும் இந்த சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. நேரடியாக வங்கி கணக்கில் மக்களுக்கு பணம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான ஏடிஎம் கார்டுகள் ஏற்கனவே மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. தற்போது வரை 1.06 கோடி பயனாளிகள் இதில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து ஒவ்வொருவராக பணம் பெற தொடங்குவார்கள். 1.70 கோடி பேர் விண்ணப்பம் செய்த நிலையில் அதிகபட்சம் 1.06 கோடி பேருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.
திட்டம் 2 - இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துஅரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 31,008 பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 17 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு கையில் எடுத்திருக்கும் அஸ்திரம் ஒன்று தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 17 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கும் விதமாக, மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டம் 3 - தமிழ்நாட்டில் பெண்களுக்கு முன்னேற்றம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படியே தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். 'புதுமைப்பெண் திட்டம்' என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
புதுமைப்பெண் திட்டம் இந்தியா முழுக்க கவனம் பெற்றுள்ளது. ,பல மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாக இது பார்க்கப்படுகிறது. விரைவில் குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு கூறி உள்ள நிலையில், இந்த புதுமைப்பெண் திட்டம் முதல் கட்டமாக அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்திற்காக ரூ.698 கோடி வருடத்திற்கு செலவு செய்யப்படும். 1 லட்சம் மாணவிகள் முதல் கட்டமாக இந்த திட்டத்திற்கு தேர்வாகி உள்ளனர்
திட்டம் 4 - தமிழ்நாட்டில் மாநகர, நகர பேருந்துகளில் பெண்களுக்கும் இலவச பயணம் என்ற திட்டம் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் "ஸ்டாலின் பஸ்" என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஸ்டாலின் பஸ் பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நகர, மாநகர பேருந்துகளில் பெண்கள் காசு கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டியது இல்லை. மாறாக வெறுமனே காசு இன்றி டிக்கெட் மட்டும் வாங்கி பயணம் செய்ய முடியும்.
இதில் திமுக பல லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். இந்த 4 திட்டங்களும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில்தான் இந்த 4 திட்டங்களை முன்னிறுத்தி திமுக தேர்தல் பிரச்சாரங்களை செய்யும் என்று அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications