எத்தனை மாடல்கள் இருந்தாலும் ‘இந்திய மாடல்’ தான் டாப்.. தமிழிசை சௌந்தரராஜன் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை : வடசென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு வந்த புதுவை மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தரிசனம் முடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Recommended Video

    எத்தனை மாடல்கள் இருந்தாலும் ‘இந்திய மாடல்’ தான் டாப்.. தமிழிசை சௌந்தரராஜன் சொல்வது என்ன?

    அப்போது பேசிய தமிழிசை சௌந்தரராஜன், எத்தனை மாடல்கள் இருந்தாலும் கொரோனா நோய் தடுப்பில் உலகைப் பொறுத்தவரை இந்திய மாடல்தான் சிறந்தது எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், வாழ்வாதாரம் பாதிப்படையாத வகையில் கொரோனா நடவடிக்கைகளை மேற்கொண்டவர் பிரதமர் மோடி, பிரதமரின் இலவச அரிசி திட்டம் மக்களுக்கு பெரிய உதவியை செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

    குரங்கு அம்மை

    குரங்கு அம்மை

    செய்தியாளர்களைச் சந்தித்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கொரோனா நோய் தொற்றானது இன்னும் பரவியிருக்கும் நிலையில் பொதுமக்களிடையே அது குறித்த விழிப்வுணர்வு இருக்கவேண்டும். இரண்டு தடுப்பூசிகளை செலுத்தாதவர்கள் முறையாக செலுத்த வேண்டும். புதுவையில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்டவர்களை கண்டறியும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனையை நாட வேண்டும் எனத் தெரிவித்தார்.

    எத்தனை மாடல்கள் இருந்தாலும்

    எத்தனை மாடல்கள் இருந்தாலும்

    மேலும் பேசிய அவர், பிரதமர் மோடி பொறுப்பேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். 8 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் பல நல்ல திட்டங்களை நாட்டிற்கு கொடுத்திருக்கிறார். எத்தனை மாடல்கள் இருந்தாலும், உலக அளவில் கொரோனா நோய்த் தொற்றை பொறுத்தவரை 120 கோடி மக்களை கொண்ட இந்திய நாட்டின் பிரதமரின் இந்திய மாடலை தான் உலக நாடுகள் பின்பற்றுகின்றன. வாழ்வாதாரம் பாதிக்கப்படாதபடி நடவடிக்கைகளை கொரோனா காலத்தில் பிரதமர் மேற்கொண்டார்.

    உலக நாடுகள் பாராட்டு

    உலக நாடுகள் பாராட்டு

    அண்மையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மாநாட்டில் கூட, அதில் பங்கேற்ற உலகத் தலைவர்கள், அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, கொரோனாவை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்படும் என நினைத்திருந்தோம். ஆனால், சரியான நேரத்தில் சரியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகளை அளித்து இந்திய மக்களை மட்டுமன்றி, பல நாட்டு மக்களை காப்பாற்றிய இந்திய பிரதமரின் முயற்சி பாராட்டுக்குரியது என்றனர் எனத் தெரிவித்தார்.

    இலவச அரிசி திட்டம்

    இலவச அரிசி திட்டம்

    மேலும், பிரதமரின் இலவச அரிசி திட்டம் மக்களுக்கு பெரிய உதவியைs செய்துள்ளது. கொரோனா காலத்தில் வளர்ந்த நாடுகள் கூட பொருளாதாரத்தில் பின்னடைவைச் சந்தித்து மக்கள் பசியால் வாடிய நிலையில், இந்தியாவில் மக்கள் பசியால் வாடவில்லை" என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+