கைமாறும் கணவன்கள்... 2 பெண்களும் விடுவதாக இல்லை.. மனைவிகளின் எக்ஸ்சேஞ்ச் மனுவால் ஆடிப்போன குவாலியர்
சென்னை: குவாலியரில் தனது அக்காவின் கணவரைத் தங்கையும், தங்கையின் கணவரை அக்காவும் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 பேரின் சம்மதத்துடன் எடுக்கப்பட்ட இந்த முடிவைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரும் இந்த மனு, பலருக்கும் வியப்பை தந்துள்ளது. தனிமனித விருப்பமா அல்லது சமூக ஒழுக்கமா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ள இந்த வழக்கின் பின்னணி என்னவென்று இங்கே பார்ப்போம்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. அங்கு வசிக்கும் உடன்பிறந்த சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

சகோதரிகளின் விசித்திர முடிவு
இரு சகோதரிகளும் சில வருடங்களுக்கு முன்னர்தான் வெவ்வேறு குடும்பங்களில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். ஆனால், திருமண வாழ்க்கை தொடங்கிய சில காலத்திலேயே , அவரவர் துணைகளுடன் வாழ்வதில் ஒத்துப்போகவில்லையாம்..
பொதுவாகத் தங்களுக்குள் பிடிக்கவில்லை என்றால் பிரிந்து செல்வதே இயல்பு. ஆனால், இந்தச் சகோதரிகளோ, அக்கா தனது தங்கையின் கணவருடனும், தங்கை தனது அக்காவின் கணவருடனும் இணைவதே தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்ற ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.
4 பேருக்கும் சம்மதம் - குவாலியர் கோர்ட்டில் வாதம்
ஆம், தங்களது கணவர்களை பரஸ்பரம் மாற்றிக் கொள்ள இருவருமே முடிவெடுத்தனர்.. அதுவும் ஒப்பந்த அடிப்படையில் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து, இதற்காக அனுமதி கோரி ஹைகோர்ட்டின் கதவை தட்டி உள்ளனர்..
விவாகரத்து பெற்றுப் பிரிவதே பெரிய விஷயமாகப் பார்க்கப்படும் சூழலில், "கணவர்களை எக்ஸ்சேஞ்ச்" செய்துகொள்ள அனுமதி கோரும் இவர்களது துணிச்சல், நீதிமன்ற வளாகத்தையே ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
இந்த வழக்கில் சட்ட வல்லுநர்களும் ரொம்ப குழம்பி போய்விட்டார்கள்.. ஏனென்றால், இந்த 4 பேரும், அதாவது இரண்டு சகோதரிகள் மற்றும் அவர்களது இரண்டு கணவர்கள் - இதற்கு பரிபூரண சம்மதம் தெரிவித்துள்ளனர் என்பதால், இவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை..
பண்டமாற்று முறைக்கு இடமுண்டா?
"எங்களுக்குள் எந்தப் புகாரும் இல்லை, 4 பேருமே பேசித்தான் இந்த முடிவை எடுத்தோம்" என்று இவர்கள் தரப்பில் வாதிடப்படுகிறது. ஆனால், தனிமனித விருப்பம் என்ற பெயரில் சட்டத்தை எப்படி வளைக்க முடியும் என்பதே இப்போதுள்ள மிகப்பெரிய கேள்வி.
இந்தியத் திருமணச் சட்டம் 1955-ன் படி, ஒரு திருமணம் நடைமுறையில் இருக்கும்போது முறையான விவாகரத்து இல்லாமல் இன்னொருவருடன் இணைவது அல்லது துணையை மாற்றிக்கொள்வது என்பது கடுமையான கிரிமினல் குற்றமாகும்.
"திருமணம் என்பது நுகர்வோர் சந்தையில் நடக்கும் பண்டமாற்று முறை அல்ல" என்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்தபோதே சட்ட நிபுணர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 4 பேரின் சம்மதம் இருந்தாலும், சமூகச் சட்ட ஒழுங்குமுறைக்கு எதிராக இப்படி ஒரு அனுமதியை உயர் நீதிமன்றம் வழங்கிவிட முடியாது.
தனிமனித சுதந்திரமா? சமூக ஒழுங்கா?
ஆனாலும், அந்தச் சகோதரிகள் விடுவதாக இல்லை. விவாகரத்து என்ற நீண்ட கால சட்ட நடைமுறைகளுக்குப் போய் நேரத்தை வீணடிக்க விரும்பாமல், ஒரு "ஷார்ட்கட்" முறையில் தங்களது உறவை மாற்றிக்கொள்ளத் துடிக்கிறார்களாம்..
இவர்களது இந்த விசித்திர மனுதான் பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது.. இளம் தலைமுறையினரின் உறவுச் சிக்கல்களையும், சட்டத்தின் மீதான அவர்களது பார்வையையும் ஒரு கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.
இந்த மனு இப்போதைக்கு நிலுவையில் உள்ளது. குவாலியர் உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக என்ன செய்யப் போகிறது? உறவுகளின் புனிதத்தைச் சட்டம் காக்குமா அல்லது தனிமனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா? என தெரியவில்லை.. விரைவில் குவாலியர் நீதிமன்றம் இது தொடர்பான "அதிரடி" தீர்ப்பை தரப்போகிறது...!!












Click it and Unblock the Notifications