விஜய்யை அசிங்கப்படுத்துவதே தற்குறி ரசிகர்கள்தான்! ஜி.பி.முத்து கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு அசிங்கத்தை ஏற்படுத்துவதே தற்குறி ரசிகர்கள்தான் என யூடியூபர் ஜி.பி.முத்து கடுமையாக விமர்சித்துள்ளார். பிள்ளை குட்டிகள் போனாலும் போகட்டும், ஆனால் விஜய்யை பார்த்தே தீர வேண்டும் என்ற மனநிலை அவர்களுக்கு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் ஜி.பி.முத்து தனது வீடியோவில் பேசுகையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பணத்தை பெற்றுக் கொண்டு பேசியது ரொம்ப கேவலமாக இருக்கிறது.

gp muthu vijay karur

அதை பேட்டியாக சொல்லும் விதமும் மிகவும் மோசமாக இருந்தது. பிள்ளைகள் உயிரை விட 20 லட்சம் பணம் மிக பெரியதாக தெரிகிறதா? 2 பிள்ளைகள் உயிர் போய்விட்டது. அதற்கு அவர்கள் வருந்தி பேசவில்லை.

ரொம்ப வெட்கமாக இருக்கு, பெத்த பிள்ளைகளை இழந்த பிறகு எத்தனை லட்சம், எத்தனை கோடி வந்தாலும் அதெல்லாம் பெரியது கிடையாது. விஜய் சாருக்காக எனது பச்சை பிள்ளை உயிரை கொடுத்து இருக்கு, இருந்தாலும் விஜய் சாரை கிட்ட போய் பார்த்தோம் என்று கூறுகிறார்கள் எவ்வளவு கேவலமாக இருக்கு, வெட்கமா இல்லையா என கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து ஜி.பி.முத்துவை தவெகவினரும் விஜய் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் மற்றொரு வீடியோவில் கூறியிருப்பதாவது: நீங்கள் விஜய் ரசிகரா இருங்க..யாராவது இருங்கள். நானும் விஜய் படம் பார்த்துள்ளேன். பூவே உனக்காக படம் பல முறை பார்த்துள்ளேன். சிந்தித்து பார்த்து பேசுங்கள். பணத்தை பெற்றுக்கொண்டு பேட்டி கொடுக்கிறார்கள்.

இந்த மாதிரி பேட்டி கொடுத்தால் யாருக்கு அசிங்கம் என பாருங்கள். இப்படி பேசி, பேசி தான் விஜய்க்கு அசிங்கத்தை ஏற்படுத்துகிறீர்கள். உயிருக்கு முக்கியத்தவம் கொடுங்கள் என்று தான் தெரிவித்தேன். பணத்திற்காக உயிரை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது என்றுதான் நான் சொன்னேன்.

நீங்க இப்படி பேசி பேசி தான் தற்குறி என்ற பெயரை எடுத்துள்ளீர்கள். நாங்க தற்குறி இல்லை. விஜய்யை அசிங்கப்படுத்துவதே விஜய் ரசிகர்கள் தான். நாங்கள் எல்லாம் அசிங்கப்படுத்தவில்லை என முத்து பேசியுள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரச்சார பொதுக் கூட்டம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்த விஜய்யின் முகத்தை பார்க்க மக்கள் முண்டியடித்தனர். மேலும் அந்த கூட்டத்திற்கு விஜய்யின் பெரிய சைஸிலான பிரச்சார வாகனம் அந்த கூட்டத்திற்குள் நுழைந்த போது இடம்விடுவதற்காக மக்கள் நெரிசல் ஏற்பட்டது.

அப்போது பலர் மூச்சுத்திணறி, கீழே விழுந்ததில் 41 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இறந்த 41 பேரின் உடலுக்கும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்டோர் நேரில் போய் அஞ்சலி செலுத்தினர். அது போல் பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

கரூரில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியாக இறந்த 41 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அது போல் தவெக தலைவர் விஜய்யும் தலா ரூ 20 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தார். அந்த பணத்தை கூட 16 நாட்கள் கழித்துதான் விஜய், பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் போட்டார்.

இந்த பணம் வந்ததும் கூட்ட நெரிசலில் இரு குழந்தைகளையும் இழந்த பெண் ஒருவர், விஜய் மீது எந்த கோபத்தையும் வெளிப்படுத்தாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

நாய்க் கடியால் பெரியவர்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்ட போது கூட நாய்களுக்கு வரிந்து கட்டி கொண்டு வந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் குறித்தும் முத்து, கோபமாக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+