தலைவர் நித்யானந்தாவே வெளியே இருக்காரு.. என்னை கைது செஞ்சுடுவாங்களா என்ன?.. சவால் விடும் மதன்!
சென்னை: நித்யானந்தாவே வெளியில் இருக்கும் போது என்னை கைது செய்து விடுவார்களா? என போலீஸாருக்கு யூடியூபர் மதன் சவால் விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விளையாட்டான பப்ஜியை சட்டவிரோதமாக விளையாடிய யூடியூபர் மதன், அந்த விளையாட்டை வெற்றிகரமாக விளையாடுவது எப்படி என்பது குறித்த வீடியோக்களில் பெண்களையும், சிறுமிகளையும் ஆபாசமாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து மதன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள மதனை பிடிக்க போலீஸார் சேலம் விரைந்துள்ளனர்.

மதன்
இதனிடையே தலைமறைவாக உள்ள மதன் தனது பெண் ரசிகைகளுடன் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் போலீஸாருக்கு சவால் விடும் வகையில் மதன் பேசியுள்ளதாக தெரிகிறது. அதில் ஒரு பெண் ரசிகை கேள்வி எழுப்புகையில், உங்கள் போட்டோவை எல்லாம் வெளியிட்டுள்ளார்களே?

புகைப்படம்
அதற்கு மதன் கூறுகையில் எனது போட்டோவை வெளியிட்டு யூடியூப் தொடர்பான செய்திகளை கூறி வருகிறார்கள். அதில் எனது அண்ணன் புகைப்படமும் உள்ளது. நான் புகைப்படம் எடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்த போது நான் எடுத்த புகைப்படத்தை ஒரு சிலர் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஜாலி
இது போன்ற விஷயங்களை ஜாலியாக குஜாலாக எடுத்து கொள்ள வேண்டியதுதான் என பேசியுள்ளார் மதன். நீங்கள் ஜெயிலுக்கு சென்றுவிடுவீர்களா என ஒரு ரசிகை கேட்கிறார், அதற்கு மதன் அதற்கு வாய்ப்பே இல்லை. நம்பர் 1 லாயர்களை வைத்துள்ளேன், டெல்லியிலும் வக்கீல்கள் இருக்காங்க, லட்சக்கணக்கில் இதற்கு செலவு செய்துள்ளேன்.

யூடியூப் சேனல்
ஒரு வேளை அப்படி நடந்தால் வெளியில் வந்து மீண்டும் யூடியூப் சேனலை தொடங்குவேன். அதற்கு மதன் யூடியூப் சேனல் என்றே பெயர் வைப்பேன் என கூறுயுள்ளார். இதுக்கெல்லாம் கைது செய்வாங்களா என ஒரு ரசிகை கேட்டதற்கு, மதனோ நம்ம தலைவர் நித்யானந்தாவே வெளியில் இருக்கும் போது என்னை கைது செய்து விடுவார்களா என்ன, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என பேசியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications