மரணத்திலும் கணவனை பிரியாத மனைவி ஜீவா..கோவை மக்களை சோகத்தில் ஆழ்த்திய இறப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அருகே கணவன் இறந்த துக்கம் தாளாமல் அவரது காலடியிலேயே மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர்கள் திருப்பதி - ஜீவா தம்பதி. திருமணமாகி 50 ஆண்டுகள் மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர் இந்த தம்பதி.

ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை. திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் திருப்பதி.

திருப்பதி மரணம்

திருப்பதி மரணம்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திருப்பதிக்கு குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சையளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் திருப்பதி.

மயங்கி விழுந்த ஜீவா

மயங்கி விழுந்த ஜீவா

கணவனின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி புலம்பினார் மனைவி ஜீவா. அஞ்சலிக்காக வைக்கப்பட்ட கணவரின் காலடியில் திடீரென மயங்கி விழுந்தார் ஜீவா.

கணவர் உடல் அருகில்

கணவர் உடல் அருகில்

உடனடியாக அவரை பரிசோதித்து பார்த்ததில் அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கணவர் திருப்பதியின் உடல் அருகிலேயே மனைவி ஜீவாவின் உடலையும் அஞ்சலிக்காக வைத்தனர் உறவினர்கள்.

சோகம்

சோகம்

மரணத்திலும் கணவரை பிரியாமல் அவர் மரணமடைந்த சிறிது நேரத்திலேயே மனைவியும் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. திருமணம் முடிந்த மூன்றாவது மாதத்திலேயே தம்பதிகள் விவாகரத்து கேட்டு கோர்ட் வாசலில் நிற்கும் இந்த காலத்தில் 50 ஆண்டுகள் வாழ்ந்த பின்னரும் பிரியாமல் உயிரைவிட்டுள்ளனர் திருப்பதி- ஜீவா தம்பதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+