பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் விழுந்து வணங்கிய சினேகா, பிரசன்னா.. குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம்
கோவை: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் ஆர்வத்துடன் சினேகா, பிரசன்னாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கோவையின் பழங்கால அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்வது பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில். 2 ஆம் நூற்றாண்டில் கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. கச்சப்ப முனிவர் மற்றும் அருணகிரிநாதரால் பாடப்பட்ட தலமாகவும் உள்ளது. இக்கோயிலுக்கு, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இக்கோயிலுக்கு அண்மையில் கிரிக்கெட் வீரர் சேவாக், நடிகர் சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் சுவாமி தரிசனம் செய்திருந்தனர். இந்நிலையில், நடிகை சிநேகா தனது கணவர் பிரசன்னா, மகன், தந்தை மற்றும் உறவினர்களுடன் வந்து சாமி தரிசனம் செய்தார். பட்டீஸ்வர சுவாமியை வழிபட்டு, அர்ச்சனை செய்தனர்.
தொடர்ந்து, கோயிலின் வெளிப் பிரகாரத்தில் உள்ள பாலதண்டபாணி, பச்சை நாயகி அம்மன், நடராஜர் சந்நிதியில் குடும்பத்துடன் சுவாமியை வழிபட்டனர். பின்னர் கோயில் கொடிமரம் முன்பு விழுந்து வணங்கி வழிபட்டனர். பின்னர், கோயிலில் சிறிது நேரம் அமர்ந்த பின்னர் புறப்பட்டுச் சென்றனர். திடீரென நடிகர், நடிகைகள் வந்த நிலையில், மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
சமீபத்தில் தான் சினேகா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தன்னுடைய கணவர் பிரசன்னாவுடன் 14 கிலோமீட்டர் தொலைவு உள்ள கிரிவலம் பாதையில் இந்திரலிங்கம் அக்கினி லிங்கம் எமலிங்கம் வாயுலிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கங்களையும் திருநேர் அண்ணாமலையார் உள்ளிட்ட அனைத்து திருக்கோவிலிலும் விடிய விடிய கிரிவலம் சென்றிருந்தார்.
அப்போது சில திருநங்கைகள் சினேகாவுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொல்ல, அவர்கள் அனைவருடமும் சிரித்த முகமாகவே சினேகா போஸ் கொடுத்திருக்கிறார். திருவண்ணாமலையைத் தொடர்ந்து, தற்போது பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications