நரி கதை.. கொங்கு மண்டலம் யாருக்குனு பார்த்துடலாம்.. எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை சவால்!
கோவை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார் அண்ணாமலை. எடப்பாடி பழனிசாமியை நரி கதை சொல்லி விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் ரோடு ஷோ நடத்துவதை விமர்சித்திருந்தார். அதேபோல, திமுக தலைவர் ஸ்டாலினும் பிரதமர் மோடியின் ரோடு ஷோவை விமர்சித்ததோடு, ஊழல் யுனிவர்சிட்டிக்கு வேந்தராக மோடி இருப்பார் என நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசி இருந்தார். இந்நிலையில், அவர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

நரி கதை: கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில், "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளது 'நரி ஒரு திராட்சை பழத்தை எட்டிப் பிடிக்க முயன்றுவிட்டு, பறிக்க முடியாததால் நரி அந்த திராட்சை பழம் புளிக்கிறது' என்று சொல்வதைப் போல் உள்ளது. எடப்பாடி பழனிசாமியை ரோடு ஷோ செல்ல சொல்லுங்கள், அதில் எத்தனை பேர் வருவார்கள். எத்தனை பேர் அவர்களுக்காக வருவார்கள் என்பது தெரியும். அவர்கள் வீதியில் வந்தால் மக்கள் யாரும் பார்ப்பதற்கு தயாராக இல்லை. அதனால் மக்களை அழைத்து சென்று பட்டியில் அடைத்து வைத்து, எழுதி வைத்து படிப்பதை கேட்க வைக்கிறார்கள்.
பிரதமர் மோடி நடத்திய ரோடு ஷோவை எடப்பாடி பழனிசாமி நடத்த வேண்டியதுதானே? அப்படி நடத்தினால் மக்கள் வரமாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். அரசியல் கட்சிக் கூட்டங்கள் தமிழகத்தில் எப்படி நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
திமுக - பாஜக இடையேதான் போட்டி: தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக - பாஜக இடையே தான் போட்டி. இரண்டு கட்சிகள் தற்போது ஆட்சியில் உள்ளன. அப்படி என்றால் இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே தானே போட்டி. களத்தில் யார் போட்டியாளர்களாக இருக்கிறார்களோ அவர்கள் செய்கிற தவறை தான் சொல்ல முடியும். அதனால்தான் பிரதமர் மோடி மேடைகளில் திமுகவை மட்டும் பேசி அதிமுகவைப் பற்றி பேசவில்லை.
பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்கிறார் அமைச்சர் டிஆர்பி ராஜா. அவரது தந்தை டிஆர் பாலு தான் முதல் சமூக விரோதி. சாராயம் விற்பவர்கள் சமூக விரோதிகள் தானே. அப்படியெனில் டிஆர் பாலு சமூக விரோதிதான். சமூக விரோதியின் பையனாக இருந்துகொண்டு டிஆர்பி ராஜா இப்படி பேசுவது நகைச்சுவையாக உள்ளது. தனது தந்தை சாராயம் விற்கவில்லை என டிஆர்பி ராஜா கூறட்டும், அவருக்கு நான் பதில் கூறுகிறேன். எதற்காக டிஆர் பாலு தஞ்சாவூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தஞ்சம் அடைந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.
கியாரண்டி இதோ: பிரதமர் மோடியிடம் கியாரண்டி கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின். நிச்சயமாக 2024 தேர்தலுக்குப் பிறகு கோபாலபுரத்தில் ஊழல் குடும்பத்தினர் சிறையில் இருப்பார்கள் என்பதற்கு மோடி கியாரண்டி கொடுப்பார். தமிழகத்தின் 8 கோடி மக்களும் திமுக என்ற தீய சக்தியிடம் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதற்கும் மோடி கியாரண்டி கொடுப்பார்.
திமுக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள தனது தேர்தல் விளம்பரத்துக்கு மட்டும் ரூ.7.33 கோடி செலவு செய்துள்ளது. தேர்தல் விளம்பரங்களை செய்துள்ள இந்த கம்பெனியின் பெரும் பங்கு ஸ்டாலின் மருமகன் சபரீசன் பெயரில் உள்ளது. இப்படி ஒரே குடும்பம் அனைத்தையும் ஆள்வதை தடுப்பதை பிரதமர் மோடி கியாரண்டியாக கொடுப்பார்.
ஸ்டாலின் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின் கனவுக்கு எல்லாம் கியாரண்டி கொடுக்க முடியாது. தமிழகத்தில் பட்டியலின மக்களை இரண்டாம்தர குடிமக்களாக ஸ்டாலின் நடத்தவில்லையா? அவர்களுக்கு ஸ்டாலினால் கியாரண்டி கொடுக்க முடியுமா என்றால் முடியாது. தமிழகத்தில் குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி இந்த தேர்தல் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
கொங்கு மண்டலம் யாருக்கு?: பாஜக உள்ளே வந்தால் அனைத்தும் காணாமல் போய்விடும் என்று 60 ஆண்டுகளாக ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். இப்படி உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் சுக்குநூறாக உடைந்து வருகிறது. தேர்தலுக்கு பின் முற்றிலுமாக அது அகற்றப்படும். திமுகவில் வாரிசுகளுக்கு தான் வாய்ப்பளிக்கப்படுகிறது. அவர்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் ஜூன் 4ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெல்லும்.
ஜூன் 4ஆம் தேதி கொங்கு மண்டலம் யாருக்கு என்பதை பார்த்துவிடலாம். ஊழல் பல்கலைக்கழகத்துக்கு வேந்தராக மோடி இருப்பார் என்று ஸ்டாலின் பேசியுள்ளார். நான் சொல்கிறேன், ஊழல் பல்கலைக்கழகத்துக்கு பெயரே ஸ்டாலின் என்றுதான் இருக்கும். ஊழல் பல்கலைக்கழகத்துக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்தால் அதற்கு வேந்தராக மோடி இருப்பார். பல்கலைக்கழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை வேந்தர்கள்தான் வெளிக்கொண்டு வருவார்கள்.
பண அரசியலை கோவையில் இருந்து ஒழிக்க முடியும் என்பது என்னுடைய தீர்க்கமான நம்பிக்கை. கோயம்புத்தூர் மக்கள் தமிழகத்துக்கு வழிகாட்டுவார்கள். பண அரசியல் என்ற பேயை ஓட்ட கோவை மக்கள் கையில் வேப்பிலை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கோயம்புத்தூரில் இதை நான் செய்து காட்டுகிறேன்" என ஆவேசமாகப் பேசியுள்ளார் அண்ணாமலை.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications