பாஜக தமிழர்களின் கட்சி! இதென்ன புதுசா இருக்கே! பாதயாத்திரையில் அண்ணாமலையின் புது முழக்கம்!
கோவை: பாஜகவை வெளியூர் கட்சி என்பது போல் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் போலி பிம்பம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் உடையும் என்றும் பாஜக தமிழர்களின் கட்சி எனவும் அண்ணாமலை புது முழக்கத்தை முன் வைத்துள்ளார்.
என் மண் என் மக்கள் என்ற முழக்கத்துடன் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் இதனைக் கூறினார். மேலும், அங்கு அண்ணாமலை பேசியதாவது;

அண்ணாமலை பேச்சு: ''பிரதமர் மோடி ஆட்சியில், நமது நாடு, ஒன்பது ஆண்டுகளில் பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். 2047 ஆம் ஆண்டுக்குள், முதலிடத்தைப் பிடிக்க நமது பிரதமர் சபதம் ஏற்றிருக்கிறார்.
நேர்மை, துணிவு, தன்னம்பிக்கை, தைரியம் நிறைந்த நமது பிரதமர் மோடிக்கு, மூன்றாவது முறையாக வாய்ப்பு கொடுக்க வேண்டும். ''
குடும்ப ஆட்சி: ''குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு பிரதமர் மோடி நேர்மை மீது பொறாமை. ராகுல் காந்தியை முப்பது ஆண்டுகளாக 17 முறை முன்னிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவரால் சாமானிய மக்களை ஈர்க்க முடியவில்லை. மோடி அவர்கள் சாமானிய மக்களைப் பிரதிபலிக்கிறார். குடும்ப அரசியல் ஜனநாயகத்தின் சாபம். அதனால் தான் மோடி அதை நீக்க விரும்புகிறார். ''
திமுகவுக்கு கைவந்த கலை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அத்தனை விஷயங்களிலும் தோற்றிருக்கிறார். திமுக எல்லா விஷயங்களிலும் தோற்றிருக்கிறது. திமுகவுக்குத் தெரிந்தது ஜாதி அரசியல், பண அரசியல் மட்டும்தான். பிரச்சினை உருவாக்குவதும் அதைத் தீர்ப்போம் என்று மக்களை ஏமாற்றுவதும் திமுகவுக்கு கைவந்த கலை.
பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்: அரசியல் தூய்மைக்கு பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது பாஜகவின் நம்பிக்கை. அதனால்தான் 33% இட ஒதுக்கீடு கொண்டு வந்திருக்கிறார்கள். திமுகவில் குடும்ப கோட்டாவில் மட்டும்தான் இட ஒதுக்கீடு. திமுக அமைச்சர்களில் 34 பேரில் 2 பேர் மட்டுமே பெண் அமைச்சர்கள். தமிழகத்தில் புதிய அரசியலைக் கொண்டு வர வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வரும் பாராளுமன்றத் தேர்தல் திமுகவை அப்புறப்படுத்த வேண்டிய தேர்தல்.
தமிழர்களின் கட்சி: 2024 ல் பாரதப் பிரதமர்நரேந்திர மோடி , மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்பது உறுதி.பாஜக தமிழர்களின் கட்சி. விவசாயிகளை முன்னிறுத்தும் கட்சி. தமிழர் நலனுக்காகப் பாடுபடும் கட்சி என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். மக்களின் எண்ணம், நம்பிக்கை, உணர்வு. மக்களுடன் பாஜக இருக்கும். பாஜக வெளியூர் கட்சி என்று இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் போலி பிம்பமும் வரும் பாராளுமன்ற தேர்தலில் உடையும்.












Click it and Unblock the Notifications