செந்தில் பாலாஜி உள்ளே இருக்கும்போதே.. கனிமொழி சொன்னதும் ஜோதிமணி தந்த ரியாக்சன்.. அண்ணாமலைக்கு செக்
சென்னை: கரூரில் போட்டியிட அண்ணாமலைக்கு பயம், செந்தில் பாலாஜி உள்ளே இருக்கும்போதே அண்ணாமலைக்கு பயம். இரண்டு தகரப்பெட்டியோடு கோவைக்கு ஓடிவிட்டார் என்று எம்பி கனிமொழி விமர்சனம் வைத்துள்ளார் .
கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார். ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாக மாறி உள்ளார்.
கரூரில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இன்று கரூரில் எம்பி ஜோதிமணிக்கு ஆதரவாக எம்பி கனிமொழி பிரச்சாரம் செய்தார்.
கனிமொழி பிரச்சாரம்: கனிமொழி பிரச்சாரத்தில், ஜோதிமணி தொடர்ந்து தமிழ்நாடு உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் போராடி இருக்கிறார். பேசி இருக்கிறார். இதற்காக சஸ்பெண்ட் ஆகி இருக்கிறார். நாடாளுமன்றத்தில் அப்படித்தான் எதிர்த்து கேள்வி கேட்டால் சஸ்பெண்ட்.

அதுவே வெளியே எதிர்த்து கேள்வி கேட்டால் ஜெயில். இங்கே கூட பாருங்கள்.. பல மாதங்களாக நமது மாவட்ட செயலாளரை உள்ளே வைத்துள்ளனர். செந்தில் பாலாஜி மீது பயம். அதனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாத போதும் கூட சிறையில் வைத்துள்ளனர்.
செந்தில் பாலாஜியை விட கூடாது என்று மருத்துவ காரணம் இருந்தும் கூட உள்ளே வைத்துள்ளனர். தேர்தல் முடிந்ததும் வெளியே விட்டுவிடுவார்கள். வெளியே வருவார். பயம் அவர்களுக்கு. அவர் இல்லாமலாவது வெற்றிபெறுவோமா என்று பார்க்கிறார்கள்.
அவர் உள்ளே இருக்கும் போதே ஒருவருக்கு கரூரில் நிற்க பயம். (ஜோதிமணி கைதட்டி சிரிக்கிறார்) அதனால் தான் அண்ணாமலை கோயம்புத்தூருக்கு ஓடிட்டார் . செந்தில் பாலாஜி உள்ளே இருக்கும்போதே அண்ணாமலைக்கு பயம். இரண்டு தகரப்பெட்டியோடு கோவைக்கு ஓடிவிட்டார் .
நீங்கள் என்ன செய்தாலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் பாஜகவிற்கு கொடுக்காதீர்கள். அவர்களுக்கு இடம் கிடைக்காது. அண்ணாமலை வாயை திறந்தால் பொய்தான். அவர் 20 ஆயிரம் புத்தகம் படித்து உள்ளதாக பொய் சொல்கிறார்.
ஒரு நாளைக்கு 2 புத்தகம் படித்தால்தான் 20 ஆயிரம் புத்தகம் படிக்க முடியும். பாருங்கள் எப்படி எல்லாம் அவர் பொய் சொல்கிறார் என்று கனிமொழி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கோவை நிலவரம்: கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கே கடந்த தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்று பார்க்கலாம்.
2019 பொதுத் தேர்தல். கோவையில் அதிமுக + பாஜக + பாமக +தேமுதிக + தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்து வாங்கிய வாக்குகள் 31% மட்டுமே. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாங்கியது 46%. இப்போது திமுக கூட்டணி அப்படியே உள்ளது.
ஆனால் பாஜக கூட்டணியில் அதிமுக, தேமுதிக இல்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் சேர்ந்திருக்கு. இவர்களிடம் 11% வாக்கு வேறு கோவையில் உள்ளது. அப்படி இருக்க அண்ணாமலைக்கு கோவை களநிலவரம் சாதகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications