கோவை மக்களே.! இனி டிராபிக் பிரச்சினையும் இல்லை.. சிக்னலிலும் நிற்க தேவையில்லை! போலீஸ் தூள் ஆக்ஷன்
கோவை: கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், அதைச் சரி செய்யக் கோவை போலீசார் முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சென்னைக்கு அடுத்து இப்போது கோவையும் நெரிசல் மிகுந்ததாக மாறி வருகிறது. பீக் ஹவரிஸிலும் வார இறுதி நாட்களிலும் சென்றால் உச்சபட்ச டிராபிக் தான் இருக்கிறது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லக் கூட அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழலே இருக்கிறது.
நேற்று மாலை கூட நகரில் பல முக்கிய இடங்களிலும் டிராபிக் படுமோசமாகவே இருந்தது. கோவையில் அதிகரிக்கும் இந்த டிராபிக்கை குறைக்கக் கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கோவை: குறிப்பாக சிக்னல் இல்லாத சாலைகள் அதாவது Signal free roads என்ற திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி முக்கிய சந்திப்புகளில் இருக்கும் சிக்னல்கள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அருகில் யூ டர்ன் போடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இதைக் கோவை அவிநாசி சாலையில் அமல்படுத்தியிருந்தனர். அவிநாசி சாலையில் இருந்த சிக்னல்கள் நீக்கப்பட்டு, அருகே யூடர்ன் வசதி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால் சிக்னலில் காத்திருக்கத் தேவையில்லாமல் போனது. மேலும், போக்குவரத்து நெரிசலும் ஓரளவுக்குக் குறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வெற்றியால் உற்சாகமடைந்துள்ள கோவை போலீசார், இப்போது இதே திட்டத்தை மூன்று முக்கிய சந்திப்புகளில் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். மலுமிச்சம்பட்டி, சிந்தாமணி மற்றும் ஈச்சனாரி ஆகிய மூன்று முக்கிய சந்திப்புகளில் சிக்னல்களை அகற்றி, அருகே யூடர்ன் வசதி ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
3 சந்திப்புகள்: இந்த மூன்று சந்திப்புகளும் முக்கியமானது. அருகிலேயே பள்ளி கல்லூரிகளும் உள்ளன. இதனால் காலை மாலை நேரங்களில் இங்கே டிராபிக் அதிகமாகவே இருக்கிறது. இங்கே தான் சிக்னல் இல்லாத சாலையை ஏற்படுத்த உள்ளனர். இது குறித்து அப்பகுதி போலீசார் கூறுகையில், "இங்கே வரும் வாகனங்கள் சில நிமிடங்கள் வரை சிக்னலிலேயே காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் சிக்னல்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக ரவுண்டானா அமைக்க முடிவு செய்துள்ளோம்
ஆனால், இந்த மூன்று சந்திப்புகளும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளன. இவை இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே போக்குவரத்து சிக்னல்களை மாற்றும் எங்கள் திட்டம் பெரிய பணியாக இருக்கும். இதற்கான அனுமதியை முதலில் வாங்க வேண்டும். முதலில் மாவட்ட சாலை பாதுகாப்புக் குழுவின் உதவியுடன் விரிவான ஆய்வறிக்கையை ரெடி செய்து வருகிறோம்" என்றார்.
ஆய்வறிக்கை: சமீபத்தில், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ஜி.மனுநீதி தலைமையிலான குழு, இந்த மூன்று முக்கிய சந்திப்புகளிலும் விரிவான ஆய்வு நடத்தி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் தேவையான திட்டத்தை வகுத்துள்ளனர். அவர்கள் தங்கள் அறிக்கையை மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் வழங்கியுள்ளனர்.
இது குறித்து மனுநீதி கூறுகையில், "இதில் பொள்ளாச்சி சாலையில் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள சர்வீஸ் லேனை பேருந்துகள் பயன்படுத்துவதில்லை என்பதைக் கண்டறிந்தோம். மேலும், இங்கே பேருந்து நிறுத்தம் சந்திப்புக்கு மிக அருகில் இருக்கிறது. இதனால் அங்கே முதலில் சில மாற்றங்களைச் செய்யாமல் ரவுண்டானா அமைக்க முடியாது. அதேநேரம் ஈச்சனாரி சந்திப்பு மற்றும் சிந்தாமணி சந்திப்புகளில் போதுமான இடம் இருப்பதால் அங்கே ரவுண்டானா அமைப்பதில் எந்தவொரு பிரச்சினையும் இருக்காது" என்றார்.
சோதனை ஓட்டம்: ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழுவிடம் இது குறித்து கோவை போலீசார் விளக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து இந்த மூன்று இடங்களில் சோதனை ஓட்டம் நடத்த அனுமதி கிடைத்ததாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் அனுமதி இன்னும் கிடைக்காததால் சோதனை ஓட்டம் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் சோதனை ஓட்டும் தொடங்கும். அதன் பிறகு அங்கே நிரந்தரமாக சிக்னலை நீக்கிவிட்டு ரவுண்டானா அமைக்கும் நடவடிக்கையில் கோவை போலீசார் இறங்கவுள்ளனர்.
-
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications