நடிகை கௌதமியிடம் நிலமோசடி.. கேரளாவில் பதுங்கியிருந்த பாஜக பிரமுகர் அழகப்பன் குடும்பத்துடன் கைது
கோவை: நடிகை கெளதமி அளித்த நிலமோசடி புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் குடும்பத்துடன் தலைமறைவான பாஜக பிரமுகரான அழகப்பன், அவரது மனைவி உட்பட 6 பேரை கேரளாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பாஜகவில் உறுப்பினராக இருந்த நடிகை கௌதமி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் தனக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் உறவினர்கள் அபகரித்ததாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் இதுபற்றி கேட்ட போது, அழகப்பன் குடும்பத்தினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும் புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகாரை முன்வைத்து கௌதமி பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பாஜக பிரமுகர் அழகப்பனுக்கு சொந்தமான காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அப்போது அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஆவணங்கள் இருந்த 11 அறைகளுக்கு போலீஸார் சீல் வைத்ததோடு, முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
கௌதமியின் இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் அழகப்பன் உட்பட அவரின் குடும்பத்தினர் ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதாவது அழகப்பன், நாச்சல், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அவரது சகோதரர் K.M.பாஸ்கர், ஓட்டுநர் G. சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.இந்த நிலையில் வழக்கு தொடர்பாக 6 முறை சம்மன் அனுப்பியும் அழகப்பன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் யாரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து பாஜக பிரமுகர் அழகப்பன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மொத்தமாக தலைமறைவாகினர். இதனிடையே தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகளை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அமைத்தனர். மேலும், அவர்கள்வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் அளிக்கப்பட்டது. இதனிடையே முன் ஜாமீன் கோரி ஆறு பேரும் இரண்டு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அந்தமனுவும் அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது
இந்நிலையில், பாஜக பிரமுகர் அழகப்பன் அவரது மனைவி நாச்சியம்மாள் உட்பட 6 பேரும் கேரளாவில் பதுங்கி இருந்த நிலையில இன்று கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கியிருந்த 6 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, அவர்களை கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னைக்கு அழைத்து வர முடிவு செய்துள்ளது. சென்னைக்கு வந்த பிறகு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications