கோவையில் வடம் இழுத்த அண்ணாமலை.. கயிறு திடீரென அறுந்ததால் நடந்த விபரீதம்! பாஜக தலைவருக்கு என்னாச்சு?
கோவை: கோவையில் இன்று நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கயிறு இழுத்தார். அப்போது திடீரென்று கயிறு அறுந்ததால் அவர் கீழே விழப்போனார். அப்போது உடனடியாக சுதாரித்த பாதுகாவலர்கள் அண்ணாமலையை தாங்கி பிடித்தனர். இதில் அவர் தப்பிய நிலையில் பிற பாஜக பிரமுகர்கள் தரையில் விழுந்தனர்.
நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்பிறகு நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம், நேற்று என்று பள்ளி, கல்லூரிகளில் கொண்டாட்டம் களைகட்டியது.

அதேபோல் தமிழக அரசியல்வாதிகளும் பொங்கல் பண்டிகைகளை கொண்டாட தொடங்கி உள்ளனர்.. நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் சென்னையில் உள்ள சொந்த தொகுதியான கொளத்தூரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
இதன் தொடர்ச்சியாக இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். கோவையில் நடந்த பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் இன்று அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அண்ணாமலை பாஜக தலைவர்களுடன் சேர்ந்து வடம் இழுக்கும் போட்டியில் பங்கேற்றார்.
பாஜக கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் இருபிரிவாக பிரிந்து கயிறு இழுத்தனர். அப்போது திடீரென்று கயிறு அறுந்தது. இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் கயிறு இழுத்த இருஅணியினரும் கீழே விழுந்தனர். கயிறு விழுந்தபோது அண்ணாமலை கீழே விழும்படி சென்றார். ஆனால் அவர் அருகே இருந்த பாதுகாவலர்கள் அண்ணாமலையை தாங்கி பிடித்தனர். இதனால் அண்ணாமலை கீழே விழவில்லை. அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 3 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் பொங்கல், அடுத்த நாள் மாட்டு பொங்கல், அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்த முறை பொங்கல் ஜனவரி 14 செவ்வாய்க்கிழமை வருகிறது.
இதனால் கடந்த 10ம் தேதியான வெள்ளிக்கிழமையில் இருந்தே வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். பஸ், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் அனைத்து ஊர்களிலும் பொங்கல் பண்டிகை களை கட்ட தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications