"இப்போது கோவை.. அடுத்த குறி சென்னையாக தான் இருக்கும், ஏனென்றால்..!" சொல்கிறார் சிபி ராதாகிருஷ்ணன்
கோவை: சில நாட்களுக்கு முன்பு கோவையில் கார் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அக்கட்சியின் சிபி ராதாகிருஷ்ணன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் முன்பு நின்று இருந்த காரி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. உள்ளே இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
கேஸ் சிலிண்டர் வெடித்ததில் கார் அப்படியே இரண்டாகப் பிளந்தால் அங்குப் பதற்றம் ஏற்பட்டது. காரின் உள்ளே இருந்த நபர் அப்படியே தீயில் கருகி உயிரிழந்தார்.

கைது
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக முதல் ஸ்டாலின் டிஜிபி சைலேந்திர பாபு உடன் ஆலோசனை நடத்திய நிலையில், இந்த வழக்கைத் தேசியப் பாதுகாப்பு முகமைக்கு மாற்றவும் பரிந்துரை செய்தார்.

சிபி ராதாகிருஷ்ணன்
இந்தச் சூழலில் கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக கேரள மாநில பொறுப்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழக அரசைக் கண்டித்து வரும் அக். 31ஆம் தேதி பந்திற்கு அழைப்பு விடுத்த அவர், இந்த விவகாரம் தொடர்பாகவும் அவர் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், இஸ்லாமியப் பயங்கரவாதம் கோவையில் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவை கார் வெடிப்பு
அவர் மேலும் பேசுகையில், "1998இல் திமுக ஆட்சியில் இருந்த போது தான் கோவை குண்டுவெடிப்பு நடந்தது. அந்த தொடர் குண்டு வெடிப்பால் கோவை மக்களே துயரத்திற்கு ஆளானார்கள்.. இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு சதி சம்பவம் நடக்க இருந்தது. அதிர்ஷ்டவசமாக இதற்கு மூளையாகச் செயல்பட்டவர் அதனாலேயே பலியாகி உள்ளார். இச்சம்பவம் நடந்தவுடன் டிஜிபி வந்ததை வரவேற்கிறோம், ஆனால் அவர் சரிவர ஆய்வு செய்யாமல் சிலிண்டர் வெடித்ததுள்ளது கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு இயக்கம்
உயிரிழந்த அவர் இஸ்லாமிய தீவிரவாதிகளின் உறவினர் என்பதையும் மறுக்க இயலாது. மேலும், அவர் சிறையில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.. தமிழக உளவுத்துறை இந்த நபரின் நடவடிக்கையைக் கண்காணிப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பின் தான் தமிழக முதல்வர் அறிக்கை அளித்துள்ளார். தமிழக அரசு இந்த விவகாரத்தில் தேசியப் பாதுகாப்பு இயக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து இஸ்லாமியர்களையும் நாங்கள் தீவிரவாதிகளாகப் பார்க்கவில்லை.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
கோவையில் பாஜக அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட போதே தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இப்படியொரு நிகழ்வை அரங்கேற்ற அவர்கள் முயன்று இருக்க மாட்டார்கள்.இஸ்லாமியப் பயங்கரவாதத்தைத் தமிழக அரசு கண்டும் காணாமல் உள்ளது. திமுகவினர் தங்கள் வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு வாக்குகளில் மட்டுமே குறி.. சமூக நலனில் அக்கறை இல்லை.

அடுத்த குறி சென்னை
நல்வாய்ப்பாக கார் வெடிப்போடு முடிந்துவிட்டது. தமிழக அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னைக்கு அடுத்து பொருளாதாரத்தில் மிகப் பெரிய நகரம் கோவை தான். இதனால் தான் கோவையைக் குறிவைக்கிறார்கள். இதைத் தகர்த்து விட்டால் அவர்களது அடுத்த குறி சென்னையாகத் தான் இருக்கும். 75 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் ஒன்றரை டன் என எங்களுக்குத் தகவல் வந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications