கோவையில் கோழி இறைச்சி விலை கிடுகிடு உயர்வு.. சென்னையிலும் நம்ப முடியாத விலை.. ஷாக் தந்த ட்விஸ்ட்
கோவை: கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் அய்யப்ப மற்றும் முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள் என்பதால் எப்போதுமே கோழி இறைச்சி விலை அந்த காலக்கட்டத்தில் குறைவாகவே இருக்கும். ஆனால் தற்போது அதற்கு முன்னேற்பாடாகவே உற்பத்தியை கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் குறைத்தனர். இதனால் விலை குறையவே இல்லை. மறுபுறம் தற்போது வேலை நிறுத்தம் காரணமாக உற்பத்தி குறைந்ததால் கோவையில் கோழி இறைச்சி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.300-க்கு விற்பனையாகிறது.
கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் அய்யப்ப மற்றும் முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம் ஆகும் இதனால் இந்த கால கட்டங்களில் மீன், கோழி, ஆடு உள்ளிட்ட அசைவ உணவுகளை பலர் சாப்பிட மாட்டார்கள். இதன்காரணமாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் மீன், கோழி, ஆடு மற்றும் முட்டை உள்பட இறைச்சி விலை கணிசமாக குறைந்துவிடும்.

குறிப்பாக குளிர்காலம் என்பதால் கோழி இறைச்சி விலை மிகவும் குறைந்து காணப்படும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக தற்போது கோழி இறைச்சி விலை கிடுகிடுவென உயர தொடங்கி உள்ளது. கடந்த மாதம் கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.220க்கு மட்டுமே விற்பனையாகி வந்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவையில் நேற்று ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.300-க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையிலுமே ஒரு கிலோ 300 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. இதனால் இறைச்சி பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் கூறுகையில், வழக்கமாக குளிர் காலங்களில் கோழிகள் தீவனம் குறைவாக சாப்பிடும். இதனால் அவற்றின் உடல் எடை குறைந்து காணப்படும். ஆனால் அந்த காலகட்டத்தில் விரதம் உள்ளிட்ட காரணங்களால் இறைச்சி நுகர்வு குறைவாக இருக்கும். இதனால் பெரிய அளவில் விலை உயர வாய்ப்புகள் இல்லை. ஆனால் தற்போது வளர்ப்பு கோழிகளுக்கு விலை உயர்வு கோரி கறிக்கோழி உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவையில் சுல்தான்பேட்டை, திருப்பூரில் பல்லடம், பொங்கலூர், அன்னூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கறிக்கோழி பண்ணைகள் இயங்கி வருகின்றனர். அதன் உரிமையாளர்கள், வளர்ப்பு கூலியாக கோழிக்கு ரூ.20, நாட்டுக் கோழிகளுக்கு ரூ.25, காடைகளுக்கு ரூ.7 உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த 1-ந் தேதி முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். எனவே கறிக்கோழி உற்பத்தி குறைந்து உள்ளதால் அதன் விலை அதிகரித்துவிட்டது என்று தெரிவித்தார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications