கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெறும் 20 நாளில்.. 3 முறை விசிட்.. கோவைக்காக "நேரடியாக" களமிறங்கிய ஸ்டாலின்.. நம்பிக்கையில் மக்கள்!

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதால் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக களமிறங்கி அங்கு கொரோனா பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

Recommended Video

    CM Stalin Pressmeet | நேரில் வந்து பார்த்துவிட்டு பேசுங்கள் | Oneindia Tamil

    தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் குறைந்துள்ளன. முக்கியமாக தினசரி கொரோனா கேஸ் மொத்தமாக தமிழகத்தில் குறைந்துள்ளது.

    ஆனால் கோவையில் இன்னும் புதிய கேஸ்கள் பெரிதாக சரியவில்லை. கோவையில் நேற்று 3692 கேஸ்கள் பதிவானது. ஆக்டிவ் கேஸ்கள் 38824 ஆக உள்ளது. தமிழகத்திலேயே நேற்று கோவையில்தான் அதிக கேஸ்கள் பதிவானது.

    திமுக

    திமுக

    இந்த நிலையில் தற்போது கோவையில் ஆய்வு பணிகளையும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் முதல்வர் ஸ்டாலின் முடுக்கிவிட்டுள்ளார். கோவையில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் எதிலும் திமுக வெற்றிபெறவில்லை என்றாலும் கூட முதல்வர் ஸ்டாலின் அங்கு அமைச்சர்கள், அண்டை மாவட்ட எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகளை களமிறக்கி உள்ளார்.

    குழு

    குழு

    கோவையில் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த தனி டீமை தமிழக அரசு அனுப்பி உள்ளது. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த உதவிய முக்கிய அதிகாரிகளின் குழுவை கோவைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுப்பி உள்ளது. சென்னை சுகாதாரத்துறை கொரோனா கட்டுப்பாட்டு குழுவில் இருந்து முக்கிய அதிகாரிகள் அப்படியே கோவைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

     அமைச்சர்கள்

    அமைச்சர்கள்

    அதோடு கோவை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவையில் திமுக கூட்டணி சார்பாக வென்ற எம்பிக்களும் களத்தில் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தனை இருந்தும் முதல்வர் ஸ்டாலினும் இன்று நேரடியாக கொரோனா தடுப்பு பணிகளை கவனிக்க களமிறங்கினார்.

    இன்று

    இன்று

    இன்று கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு தடுப்பு பணிகளை கண்காணித்தார். அதிகாரிங்களிடம், மருத்துவர்களிடம் விசாரணை செய்தார். இன்று மாலை கோவை மாவட்ட ஆட்சியரையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். கோவைக்கு கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொள்ள சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி ஆய்வு மேற்கொண்டார்.

    எப்படி

    எப்படி

    ஆட்சி பொறுப்பேற்ற 20 நாளில் 3 முறை முதல்வர் ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளார். ஒரு எம்எல்ஏ கூட இல்லை என்றால் என்ன.. நானே நேரில் செல்கிறேன் என்று நேராக கோவைக்கு சென்று, அந்த மாவட்டத்திற்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். வாக்கு, அரசியல் வெற்றி தோல்வி அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டுவிட்டு முதல்வர் ஸ்டாலின் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் கோவைக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்.

    மக்கள்


    இது கோவையில் கொரோனாவால் கஷ்டப்படும் மக்கள் இடையே நம்பிக்கையை கொடுத்துள்ளது. முதல்வர் நம்மை கைவிடவில்லை. நமக்காக களத்தில் இருக்கிறார் என்ற நம்பிக்கையை கோவை மக்களுக்கு இது கொடுத்துள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் இந்த விசிட் உத்வேகத்தை கொடுத்துள்ளது.

    English summary
    Tamilnadu CM Stalin visits Coimbatore third time in just 20 days due to the rise of Covid 19 cases in the region.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X