சென்னை மெரினா புரட்சியை நினைவுப்படுத்திய இஸ்லாமியர்கள் போராட்டம்.. கோவையில் நடந்தது என்ன?
Recommended Video
சென்னை மெரினா புரட்சியை நினைப்படுத்திய இஸ்லாமியர்கள் போராட்டம்.. கோவையில் நடந்தது என்ன?
கோவை: சென்னை மெரினா புரட்சியை நினைவுப்படுத்தும் வகையில் கோவையில் இஸ்லாமியர்கள் செல்போன் டார்ச்லைட்டுளை காட்டினர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர்.

மண்டை உடைந்து காயம்
அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் முஸ்லீம் அமைப்பினர் மீது தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு
போலீஸார் தாக்குதலை கண்டித்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் நேற்று இரவு நடந்த முஸ்லீம்கள் போராட்டத்தில் மக்கள் செல்போன் டார்ச் லைட்களை எரிய வைத்து போராட்டம் நடத்தினர். இது ஜல்லிக்கட்டு சம்பவத்தை நினைவுப்படுத்தியது.

தடை
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதை கண்டித்து சென்னை மெரினாவில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இந்த போராட்டத்தை விட்டு விட்டு கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இதற்கு போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

டார்ச்லைட்
இதையடுத்து போராட்டத்தை ஒடுக்க அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே இளைஞர்கள் தங்களிடம் இருந்த செல்போன்களின் டார்ச்லைட்டுகளை காட்டி போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். இது பெரிதாக பேசப்பட்டது. விளக்குகளை நிறுத்திவிட்டால் மாணவர்கள் கலைந்து சென்று விடுவர் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் டார்ச் லைட்டை வைத்து உத்வேகத்தை அளித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications