"பாட்ஷா".. நாடு கடத்தப்பட்ட புள்ளி.. சிக்கிய லேப்டாப்.. கோவை கார் வெடிப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முக்கியமான லேப்டாப் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை கார் வெடிப்பு தொடர்பாக தொடர்ச்சியாக பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவத்தில் காரின் முன் பக்கத்தில் இருந்த தீவிரவாதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றதால் சம்பவ இடத்தில் மக்கள் பெரிதாக இல்லை. இதனால் தீவிரவாதியை தவிர வேறு யாரும் பலியாகவில்லை. முபின் என்ற தீவிரவாதிதான் திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கேரளா
கேரளாவில் இருந்து இவர்கள் வெடிபொருட்களை கொண்டு வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கேரளாவில் பாலக்காட்டில் இருந்து பொட்டாசியம் உள்ளிட்ட வெடிமருந்துகளை இவர்கள் கடத்தி வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் முபின் பலியாகிவிட்ட நிலையில் அவருக்கு நெருக்கமாக இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்
அந்த காரை வாங்கி கொடுத்தது, அந்த வெடிமருந்துகளை வாங்கி கொடுத்தது உள்ளிட்ட பணிகளை செய்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பெரோஸிஸ் இஸ்மாயில் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மீண்டும் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் இருந்த தொடர்பு காரணமாக அமீரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது,

லேப்டாப்
மற்றொரு நபரான முகமது தல்கா.. கோவை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பாட்ஷாவின் நெருங்கிய உறவினர் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அடிக்கடி செல்லும் வீடு ஒன்றில் போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். அந்த வீடு அப்சல் என்பவருக்கு சொந்தமான வீடு ஆகும். இவர் முபினின் உறவினர் என்று கூறப்படுகிறது. இந்த லேப்டாப் போலீசார் மூலம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

என்ஐஏ
இந்த ஆவணங்கள் அனைத்தும் இன்று அல்லது நாளை மாநில உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும். பின்னர் அந்த ஆவணங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும். அதன்பின் என்ஐஏ தென் மண்டல அதிகாரிகள் இந்த ஆவணங்களை மற்றும் லேப்டாப்களை பெற்றுக்கொள்வார் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அதன்பின் முறையாக இதில் என்ஐஏ விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications