தமிழ்ப்பெண்! அமெரிக்காவில் "ஸ்பை" டிரெய்னிங் எடுத்தவர்! கோவையில் களமிறங்கிய என்ஐஏ வந்தனா! யார் இவர்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் கார் வெடிப்பு தொடர்பாக தற்போது என்ஐஏ டிஐஜி கேபி வந்தனா விசாரணை நடத்தி வருகிறார்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற கார் வெடிப்பு தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை அதிகாரப்பூர்வமாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் அதிகாலை கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தற்போது என்ஐஏ டிஐஜி கேபி வந்தனா விசாரணை நடத்தி வருகிறார். நேற்று இரவு சென்னையில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் கோவைக்கு வந்தனர். என்ஐஏ டிஐஜி கேபி வந்தனா கோவைக்கு வருகை புரிந்தார். அவருடன் என்ஏஏ எஸ்பி ஸ்ரீஜித் கோவைக்கு வருகை புரிந்தார். இவர்கள் நேற்று இரவு தமிழ்நாடு போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். இந்த நிலையில் இன்று குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் விசாரணை செய்ய உள்ளனர்.

குண்டுவெடிப்பு

குண்டுவெடிப்பு

இதில் என்ஐஏ டிஐஜி கேபி வந்தனா என்பவர் என்ஐஏ அமைப்பின் தெற்கு பிரிவு தலைவர் ஆவார். கேரளாவில் ஐஎஸ்எஸ் அமைப்புகளை நெருக்கமாக கண்காணித்ததில் இவர் முக்கிய பங்கு வகித்தார். கேரளாவில் இருந்து சிலர் ஐஎஸ்எஸ் அமைப்பில் சென்று சேர்ந்ததை இவர் நெருக்கமாக கண்காணித்து பல கைது நடவடிக்கைகளை மேற்கொண்டார். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தூதரகப் பெயரைப் பயன்படுத்தி நடந்து வந்த தங்க கடத்தல் கடந்த 2020ம் வருடம் அம்பலம் ஆனது .

 என்ஐஏ

என்ஐஏ

இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் வேலை பார்த்த அதிகாரிகள் உட்பட பலருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விசாரணையின் போது 30 கிலோ தங்கம் வைக்கப்பட்டிருந்த பார்சல் ஒன்று அந்த துணை தூதரகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அங்கு பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். இவரிடம் செய்யப்பட்ட விசாரணையில் பல அதிகாரிகள் தூதரகம் வழியாக, தூதரக பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

இதில் ஐஎஸ் அமைப்பின் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அப்படியே உடனே விசாரணைக்கு அனுப்பப்பட்டவர்தான் என்ஐஏ டிஐஜி கேபி வந்தனா. அந்த அளவிற்கு இவர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நம்பிக்கையை பெற்றவர். இவர் தமிழ்நாட்டு பெண் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளா அரசியலை இவரின் விசாரணைகள் உலுக்கி வந்தன. என்ஐஏவில் இருக்கும் முக்கியமான அதிகாரிகளில் என்ஐஏ டிஐஜி கேபி வந்தனா ஒருவர்.

விசாரணை கைதி

விசாரணை கைதி

அதோடு இவர் நேரடியாக அமெரிக்காவில் உளவுத்துறை தொடர்பாக பயிற்சி எடுத்து இருக்கிறார். தீவிரவாதம், உளவு பார்ப்பது, உளவுத்துறை தொடர்பான பயிற்சிகளை அமெரிக்கா உளவுத்துறை பயிற்சி மையத்தில் இவர் எடுத்துள்ளார். இந்த பயிற்சியை எடுத்த சில பெண் என்ஐஏ அதிகாரிகளில் என்ஐஏ டிஐஜி கேபி வந்தனா ஒருவர். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் 2004ல் ஐபிஎஸ் அதிகாரியாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு தேர்வாகி, பின்னர் கடந்த சில வருடங்களுக்கு முன் உள்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டார்.

தமிழ்ப்பெண்

தமிழ்ப்பெண்

அதற்கு முன் பல்வேறு துறைகளில் இவர் செயலாளராக இருந்துள்ளார். நிதித்துறையில் கூட இவர் செயலாளராக இருந்துள்ளார். ஆனாலும் உள்துறையில் இருந்த அனுபவம் காரணமாக என்ஐஏவிற்கு மாற்றப்பட்டார். அதில் அவரின் பணிகள் சிறப்பாக இருந்த காரணத்தால் என்ஐஏ தெற்கு மண்டல தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தற்போது கோவை கார் வெடிப்பு தொடர்பாக நேரில் விசாரணை நடத்த இவர் களமிறங்கி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+