எல்லை காக்க வீரமரணம்: 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு வந்தே மாதரம் பாடி அஞ்சலி
இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக் பகுதியில் சீனா மற்றும் இந்திய ராணுவத்தினரியிடையே ஏற்பட்ட மோதலில் வீரமரணம்
கோவை: நாட்டின் எல்லை காக்க நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த இந்திய இராணுவத்தினருக்கு கோவையில் முக கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியுடன் குழந்தைகள் ஒன்றிணைந்து,மெழுகுவர்த்தி ஏந்தி வந்தேமாதரம் பாடலை பாடி அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழச் செய்தது.
இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக் பகுதியில் சீனா மற்றும் இந்திய ராணுவத்தினரியிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து . உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே கோவை கணபதி பகுதியில் உள்ள கோரல் என்னார் குடியிருப்பு வளாகத்தில் மரணமடைந்த இராணுவ வீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வளாகத்தில் உள்ள சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் இணைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த ராணுவ வீரர்களின் படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

முக கவசங்கள் அணிந்த படி சமூக இடைவெளியுடன் குழந்தைகள் ஒருங்கிணைத்து நடத்திய அஞ்சலி நிகழ்வு அங்கு கூடியிருந்த அவர்களின் பெற்றோர்களை நெகிழ செய்தது.












Click it and Unblock the Notifications