தேர்தல் விதிகளை மீறியதாக வழக்கு! வானதி சீனிவாசனை விடுவிப்பு! கோவை கோர்ட் அதிரடி
கோவை: தேர்தல் விதிகளை மீறியதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது பதியப்பட்ட வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கோவையில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அப்போது அவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக அவர் சென்றிருந்தார். அப்போது கோயிலில் பக்தர்களிடம் தாமரை சின்னத்தில் வாக்களிக்க அவர் கோரியதன் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் வானதி, கோயிலில் இருந்த பக்தர்களிடம் வாக்கு கேட்டதாகவும் துண்டுபிரசுரங்களை அவர் விநியோகித்ததாகவும் எந்த ஒரு ஆதாரத்தையும் அரசு தரப்பு சமர்பித்து நிரூபிக்கவில்லை என்பதால் வானதி சீனிவாசன் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications