கோயம்புத்தூரே வியந்துடுச்சு.. எங்கே பார்த்தாலும் "அவங்கதான்".. காக்கியில் மிளிரும் "தாய்மை".. கெத்து
கோவை: சமீபகாலமாகவே கோவையை கலக்கி கொண்டிருக்கிறார்கள் பெண் அதிகாரிகள்.. இதனால், மாவட்ட பெண்களுக்கு ஒருவித நிம்மதி உணர்வும், தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டு வருகிறது.
கடந்த வருடம் முதல் மேயராக கல்பனா பதவியேற்றபோதே, ஒட்டுமொத்த மக்களின் கவனமும் கோவையில் விழுந்தது.. அதிலும், பயனீர் மில் சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் கழிப்பறை கட்டுவதற்கான கோப்பில் முதல் கையெழுத்தை கல்பனா போட்டதுமே, கோவை நிமிர்ந்தது.

கோவை: இந்த ஓரிரு வருடங்களில் மட்டுமே, நிறைய பெண்கள் கோவைக்கு பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். கோவையை பொறுத்தவரை, மிகப்பெரிய தொழில்நகரம்.. மாநகரமும்கூட.
எனினும், கோவை மாவட்டத்தில் போலீஸ் உயர் பதவிகளில், கடந்த சில வருடங்களாகவே ஆண்களே ஆக்கிரமித்திருந்த நிலையில், தற்போது உயர் பதவிகளில் பெண்களும் அதிகமாகவே அலங்கரிக்க துவங்கிவிட்டனர். கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தையல் நாயகி, பயிற்சி ஏ.எஸ்.பி கரீமா, பொள்ளாச்சி சப்-டிவிசனில் பணியாற்றும் பிருந்தா என போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்களாக அசத்தி வருகிறார்கள்.
பெரிய பதவி: அதேபோல மேற்கு மண்டலத்தின் ஐ.ஜியாக, பவானிஸ்வரி ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் போன்ற பகுதிகளை உள்ளடக்கியதுதான் கோவை மேற்குமண்டலம்.. இதற்கெல்லாம் சேர்த்து ஐஜியாக ஒரு பெண் பதவியை அலங்கரித்து வருவது என்பது மிகப்பெரிய விஷயமாகும். சவால் நிறைந்த பணியாகும்.
ஐஜி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதை, கோவை மாவட்டமே பெருமையாக கருதுகிறது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: இவர்கள் அனைவருமே, பெண்களின் உரிமைகளையும், பெண்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்துவார்கள் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளதுடன், மற்ற பெண்களுக்கும் முன்னுதாராணமாகவும், உத்வேகம் தரக்கூடியவர்களாகவும் விளங்கி கொண்டிருக்கிறார்கள்.
இந்த பெண் அதிகாரிகள் ஒவ்வொருவரும் மிக முக்கிய பொறுப்பை வகிக்கக் கூடியவர்கள் என்பதால், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே தங்கள் லட்சியம் என்ற முழக்கத்துடன் பதவியேற்று கொண்டவர்கள்.
அதைவிட முக்கியமாக, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாகுபாடுமின்றி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தங்கள் மாவட்ட மக்களிடம் உறுதி தந்திருக்கிறார்கள்.
சபாஷ் பெண்கள்: காவல்துறையின் உயர்பதவிகளை பெண்கள் வகிப்பது, காண்போரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. காக்கி சட்டையுடன் கலந்த "தாய்மை" கோவை மக்களுக்கு நிம்மதி உணர்வை நிச்சயம் பெற்றுத் தரும் என்று நாம் நம்புவோம்..!!












Click it and Unblock the Notifications