கோவையில் விரைவில் திறக்கப்படும் செம்மொழி பூங்கா.. இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்
கோவை: கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும், காந்திபுரத்தில் 45 ஏக்கரில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி விரைவில் நிறைவடையவுள்ளது. பூங்கா பணிகள் அனைத்தும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடிாக கோவை மாவட்டம் பெரிய மாவட்டமாகும். இங்கு கல்வி, மருத்துவம், தொழில், வேலைவாய்ப்பு, ஐடி துறை, தொழில் துறை என வளர்ச்சி பெற்ற மாவட்டமாகும். பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக இங்கு வந்து தங்கி வசித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பொழுதுபோக்கு இடங்கள் பெரிய அளவில் இல்லை. இந்த குறையைப் போக்கும் வகையில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணி விரைவில் நிறைவடையவுள்ளது.

காந்திபுரத்தில் மத்திய சிறைச் சாலை இருந்த பகுதியில் இந்தப் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. 45 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் இந்தப் பூங்காவை அரசு திறக்க திட்டமிட்டது. ஆனால், சில சாகச அம்சங்களை சேர்க்க வேண்டும் என்பதால் வடிவமைப்பில் மாற்றம் செய்ததால் திறக்கும் பணி தாமதமானது.
இந்தப் பூங்காவில் நுழைவாயிலில் மிகப்பெரிய மலைமுகப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மலைக் குன்றுகளுக்கு இடையே மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. விலங்கினங்களும் செதுக்கப்பட்டுள்ளன. நீர்வீழ்ச்சி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் அருகில் கடையேழு வள்ளல்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூந்தோட்டகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மூன்று வரிசைகள் ஏற்படுத்தப்பட்டு நூறு வகையான ரோஜா செடிகள் வைக்கப்படுள்ளன. இந்தப் பூங்காவின் மற்றொரு பகுதியில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நீருற்றுகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், புல்தரை, போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
செம்மொழிப் பூங்காவை நவம்பர் மாத இறுதியில் திறக்க ஆலோசிக்கப்பட்டு வந்தது. உயரதிகாரிகள் பூங்கா வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பூங்காவில் அனைத்துப் பணிகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இன்னும் சில பணிகள் முடிக்க வேண்டியுள்ளதால் டிசம்பர் மாதத்துக்குள் பணிகள் அனைத்தையும் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications