பதைபதைக்கும் கோவை.. கலெக்டர் ஆபீஸுக்கு 9வது முறையாக மீண்டும் வந்த வெடிகுண்டு மிரட்டல்
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வருகிறது. இந்நிலையில், 9 ஆவது முறையாக இன்று மீண்டும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து , வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டனர். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையின் இதயப் பகுதியில் அமைந்துள்ளது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். இங்கு தினந்தோறும் உதவித் தொகை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, குறைகேட்பு முகாமில் பங்கேற்க, மனு அளிக்க என ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழையது, புதியது என்று 2 கட்டடங்கள் உள்ளன.

ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புதிய கட்டடத்தில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரின் அறைகளும், குடிமைப் பொருள் வழங்கல் துறை, கனிம வளத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. பழைய கட்டடத்தில் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம், சமூக நலத் துறை, நிலவரித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் பள்ளிகள், தனியார் அலுவலகம் என இந்த ஆண்டு மட்டும் 30க்கும் மேற்பட்ட இமெயில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்த மிரட்டல் தொடர்பாக இதுவரை எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த 4 மாதங்களில் 9 ஆவது முறையாக மீண்டும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு விரட்டல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மோப்ப நாயுடன் வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications