மேலும் எத்தனை மாணவிகள்? மொத்தம் 12 மணி நேரம் விசாரணை! கோவை சின்மயா பள்ளி முதல்வர் சொன்னது என்ன?
கோவை பள்ளி முதல்வரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது
கோவை: கோவை மாணவி தற்கொலை வழக்கு விவகாரத்தில், கைதான பள்ளி முதல்வரிடம் விசாரணை நடந்துள்ளது.. கிட்டத்தட்ட 12 மணி நேரம், பல்வேறு பதில்களை வாக்குமூலமாக போலீசாரிடம் மீரா தந்துள்ளதாக கூறப்படுகிறது.
கோவை மாணவி தற்கொலை விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. ஒட்டுமொத்த தமிழ்நாடே ஆவேசத்தில் உள்ளது.
3 நாட்களாக பரபரப்பின் பிடியில் கோவை சிக்கி தவித்து வருகிறது.. ஆர்எஸ்புரம் சின்மயா பள்ளியில் 17 வயது மாணவியின் தற்கொலைக்கு காரணம், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி தந்த பாலியல் தொல்லைதான் என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது..

கைது
6 மாதமாக மனஉளைச்சலில் மாணவி தவித்து வந்ததாக சக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.. ஆசிரியரின் பெயரையும், வேறு சிலருடைய பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களை எல்லாம் சும்மா விடாதீர்கள் என்று எழுதப்பட்ட மாணவியின் கடைசி கடிதமும், அதில் உள்ள பெயர்களும் வலுவான சாட்சியாக அமைந்துவிட்டது.. மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை
பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.. பிறகு அவரை கோவை ஆர்எஸ்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்... அங்கு துணை கமிஷனர்கள் ஜெயச்சந்திரன், உமா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பள்ளி முதல்வரிடம் போலீசார் பல கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது.

நடவடிக்கை
குறிப்பாக, ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து மாணவி தெரிவித்தும், ஏன் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை? பாலியல் தொல்லை தெரிந்தும், போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் மையத்திற்கும் தகவல் தெரிவிக்காது ஏன்? அதற்கு என்ன காரணம்? யாராவது நடவடிக்கை எடுக்க வேண்டாம், வெளியில் சொல்ல வேண்டாம் என்று அழுத்தம் தந்தார்களா? மிதுன் சக்ரவர்த்தி இந்த மாணவியை போன்று வேறு மாணவிகள் யாருக்கேனும் பாலியல் தொல்லை தந்திருக்கிறாரா? அது பற்றி புகார் ஏதாவது வந்ததா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி உள்ளதாக தெரிகிறது.

வாக்குமூலம்
இதற்கெல்லாம் மீரா ஜாக்சன் பதில் அளிக்கவும், அவைகளை போலீசார் வீடியோ பதிவுடன் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.. தொடர்ந்து 12 மணி நேரமாக வாக்குமூலம் தந்துள்ளார் மீரா ஜாக்சன்.. வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அவரை வைக்க உத்தரவிடப்பட்டிருந்தாலும், விசாரணை தொடர்ந்து நடக்க உள்ளதாக தெரிகிறது.

விசாரணை
இதுபற்றி காவல்துறை தரப்பில் சொல்லும்போது, இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடக்கிறது.. தற்கொலைக்கு முன்பு எழுதியதாக சொல்லப்பட்ட கடிதம், லீக் ஆன வாட்ஸ்- அப் மெசேஜ்கள், ஆசிரியர் - மாணவியின் ஆடியோ உரையாடல்கள் போன்றவைகளை வைத்து விசாரணையை துவக்கி உள்ளதாகவும், அந்த கடிதத்தில் உள்ள பெயர்கள், விவரங்கள் குறித்தும் விசாரணை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications