'வர 3 நாள் ஆகும்'.. கோவையில் கம்பி நீட்டிய காதல் கணவர்.. கமிஷ்னர் ஆபிஸிலேயே.. விடாத மனைவி
கோவை: கோவை சரவணம்பட்டியில் வசித்து வரும் காதல் தம்பதி இடையே சிறிய அளவில் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. அதனால் கணவர் வீட்டை விட்டே போய்விட்டார். மனைவி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது, வீடு அலங்கோலமாக கிடந்துள்ளது. அப்போது அவர்
வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள மாட்டாயா என்று கணவனிடம் கேட்டுள்ளார். இதனால் காதல் கணவர் கோபித்து சென்றுவிட்டாராம். அவரை கண்டுபிடித்து தர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் மனு அளித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரத்தை சேர்ந்த 25 வயதாகும் மகேஷ், திருத்தணியை சேர்ந்த 23 வயதாகும் அனுசுயா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர் இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததால், கடந்த இரண்டு வருடம் முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கோவை சின்னவேடம்பட்டி சக்தி நகரில் இருவரும் வசித்தனர். மகேஷ் தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி அனுசுயா திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் 16-ம் தேதி கோவை திரும்பிய அனுசுயா, வீட்டில் உள்ள அறை அலங்கோலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வீடு சுத்தமாக இல்லையாம். அலங்கோலமாக இருந்ததாம். இதனால் கோபத்துடன் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள மாட்டாயா? என தனது கணவர் மகேசிடம் போன் மூலம் கேட்டாராம்.
இதனால் மனமுடைந்த மகேஷ் கடந்த மாதம் 17-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறியவர் தற்போது வரை வீடு திரும்பவில்லையாம். அனுசுயா கணவரை காணவில்லை என சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மகேசை தேடி வருகின்றனர். இதற்கிடையே நேற்று தனது காதல் கணவரை கண்டுபிடித்து தருமாறு அனுசுயா கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதுகுறித்து அனுசுயா கூறுகையில், "நான் எனது அம்மா வீட்டுக்கு சென்று நான் கோவைக்கு கடந்த மாதம் திரும்பினேன். பின்னர் இரவு வீடு திரும்பிய நான் வீட்டில் தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் குப்பையாக கிடந்தது. கணவரும் என்னிடம் சொல்லாமல் வேலைக்கு சென்றுவிட்டார். உடனே நான் அவரை செல்போனில் தொடர்புகொண்டு வீட்டை ஏன் சுத்தமாக வைக்கவில்லை என்று அவரிடம் சத்தம் போட்டேன்.. அப்போது அவர் வேலையில் இருப்பதாக கூறி அழைப்பை துண்டித்துவிட்டார். பின்னர் அவர் எனக்கு வாட்ஸ்-அப்பில் எனது காலில் புண் உள்ளதால் மருத்துவமனைக்கு செல்கிறேன் என்றும், சாப்பிட்டு 3 நாட்கள் ஆகிறது என்றும் கூறி எஸ்எம்எஸ் அனுப்பினார். நான் அவரை வீட்டுக்கு வரச்சொன்னேன். ஆனால் அவர் இப்போது வரை வரவில்லை" இவ்வாறு வேதனையுடன் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications