"இப்படியுமா செய்வாங்க".. செல்போன் திருடிய இளைஞருக்கு நண்பர்களால் நேர்ந்த கொடூரம்.. கோவையில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்டம், சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி செல்வலட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை அவரது நண்பர்களே 3 பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த துரை என்பவரது மகன் பரத் ( 32). பெயிண்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 7 வயது மகன், 4 வயது மகள் உள்ளனர். மனைவி வேறொரு திருமணம் செய்து தனியாக வசித்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு அப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கோகுல் (24), விக்னேஷ் (24), சபரீசன் (25) ஆகிய மூவரும் பரத்தின் வீட்டுக்குச் சென்று இரவு 10 மணிக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு பரத் வீடு திரும்பவில்லை.

shock-in-coimbatore-youth-beaten-to-death-for-stealing-cell-phone-in-coimbatore

சடலமாக கிடந்த பரத்

இந்நிலையில், அப்பநாயக்கன்பட்டி சுடுகாடு பகுதியில் உள்ள காத்திருப்போர் அறையில் பரத் சடலமாக கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றினர். தடய அறிவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர். சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து உடலை கோவை ESI மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனையில் இளைஞர் அடிபட்டு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பரத்தின் நண்பர்கள் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், கோகுல், விக்னேஷ், சபரீசன் ஆகியோரை பிடித்து போலீஸார் தனித்தனியே விசாரித்தனர். விசாரணையில் மூவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

நண்பர்கள் வாக்குமூலம்

மூவரும் அளித்த வாக்குமூலத்தில் கோகுலுக்கு சொந்தமான செல்போன் கடை செலக்கரிசல் பகுதியில் உள்ளது. ஒரு வருடத்துக்கு முன்பு பரத் அங்கு வேலை செய்தார். அப்போது விலை உயர்ந்த செல்போன் ஒன்றை பரத் திருடியதாக தெரியவந்து வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். சம்பவத்தன்று சுடுகாடு அருகே சென்றபோது பரத்தை பார்த்த கோகுலுக்கு பழைய திருட்டுச் சம்பவம் நினைவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, அவரை பழி தீர்க்க கோகுல் திட்டமிட்டுள்ளார்.

சுருண்டு விழுந்த பரத்

இதையடுத்து, இரவு பரத்தை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று சுடுகாடு காத்திருப்போர் அறையில் மறைத்து வைத்திருந்த நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக அடித்துள்ளனர். பரத் சுருண்டு விழுந்த நிலையில் பயந்து தப்பிச் சென்றுள்ளனர். காலையில் பரத் உயிரிழந்த செய்தி தெரிந்ததும் மூவரும் தப்பிக்க முயன்றபோது போலீசார் கைது செய்துள்ளனர்.

கோகுல், விக்னேஷ், சபரீசன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செல்போன் திருடியதற்கு பழி தீர்ப்பதற்காக நண்பர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+