காங்கேயம் காளையுடன்.. ஜாலியாக ஒரு வாக்கிங்.. கண நேரத்தில் கவனம் ஈர்த்த திமுக வேட்பாளர்
கோவை: தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி காங்கேயம் காளையுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பலராலும் உற்று நோக்கப்படும் ஒரு தொகுதியாகக் கோவை தொண்டாமுத்தூர் தொகுதி மாறியுள்ளது. இங்கு அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணி களமிறங்குகிறார்.

அவரை எதிர்த்து திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கவனிக்கப்பட்ட முக்கிய நபர்களில் ஒருவராகக் கார்த்திகேய சிவசேனாபதி இருந்தார். இவர் தற்போது திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளராக உள்ளார்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு செல்வாக்கு அதிகம் என்பதால், மக்களின் மனங்களைக் கவரக் கார்த்திகேய சிவசேனாபதி பல்வேறு யுக்திகளை கடைப்பிடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவர் கோவை டி.பி.சாலை ஆர். எஸ்.புரம் அருகில் காங்கேயம் காளையுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். தேர்தல் விதிகளின்படி பிரசாரத்துக்கு விலங்குகளைப் பயன்படுத்தக் கூடாது.
இதனால் காங்கேயம் காளையுடன் அவர் நடைப்பயிற்சி மட்டும் மேற்கொண்டார். டி பி சாலை அன்னபூரணா முதல் நான்கு சாலை சந்திப்பு வரை காளையுடன் அவர் வாக்கிங் சென்றார். காளையை கண்டதும் அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள், ஜாலியாக செல்ஃபிகளை தெறிக்கவிட்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications