கே.டி.ராகவன் வீடியோ விவகாரம்.. மதன் ரவிச்சந்திரன், திமுக மீது குற்றம்சாட்டும் வேலூர் இப்ராஹிம்
கோவை: மதன் ரவிச்சந்திரனை முன்னிறுத்தி கே.டி.ராகவனை வைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சித்துள்ளது என்று பா.ஜ.க தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
பாஜக தமிழக பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் வீடியோ காலில் செக்ஸ் சாட் செய்வது போன்ற வீடியோவை மதன் ரவிச்சந்திரன் என்பவர் சமீபத்தில் யூடியூப்பில் வெளியிட்டார். இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார் கே.டி.ராகவன்.
உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளதாக ராகவன் கூறியதோடு, சட்டப்படி இந்த பிரச்சினையை சந்திப்பதாக கூறியிருந்தார்.

இஸ்லாமியர்கள் இணைகிறார்கள்
இந்த நிலையில், பா.ஜ.க தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம், கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், இன்று, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: கணிசமான இஸ்லாமியர்கள் பாஜகவில் தொடர்ந்து இணைந்து கொண்டிருக்கிறார்கள். கோவை மாநகர் மாவட்டம் சார்பாக பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொள்வதற்காக நம்ம ஆட்டோ நிறுவனர் ஷாஜகான் வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ஆயிரம் இஸ்லாமியர்களோடு பாஜகவில் இணைத்துக் கொள்ள இருக்கிறார்.

மத நம்பிக்கைகள்
இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடிய திமுகவின் கபட நாடகம் செல்லுபடியாகாது. இந்து சமய நம்பிக்கைகளின் மீது திமுக அரசாங்கம் தொடர்ந்து கேலி செய்து வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது. பயபக்தியோடு ஆலயங்களுக்கு செல்ல கூடியவர்களை தடுக்கும் வேலையை திமுக அரசாங்கம் செய்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழாவை திமுக அரசாங்கம் தடுப்பது, வன்மையான கண்டனத்துக்குரியது. இந்து மக்களின் நலன்களைக் காப்பதற்காக திமுக அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாக திமுக அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

திமுக மீது குற்றச்சாட்டு
திமுகவின் தூண்டுதலின் பேரில்தான் மதன் ரவிச்சந்திரனை முன்னிறுத்தி பாஜகவில் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கே.டி ராகவனை வைத்து அரசியல் செய்யப்பட்டிருப்பதாக கூறிய வேலூர் இப்ராஹிம், கே.டி. ராகவன் விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தெளிவாக நடவடிக்கையை கையாண்டிருக்கிறார் என்றும் கூறினார். ஒரு பெண்ணை வைத்து ஒரு ஆணின் தனிப்பட்ட ஆசையைத் தூண்டி அதில் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல் நாகரீகமற்ற வேலையை திமுக செய்திருப்பதாகவும், பாஜகவில் பெண்கள் அதிகமாக இணைந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications