Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஜெகஜால கில்லாடி"யின் வக்கிரம்.. மங்கை உருவத்தில் கிட்ட வந்த "மைனர்".. பதறிய உறவுகள்.. சபாஷ் போலீஸ்

17 வயது சிறுவனை கடத்தி சென்று பாலியல் தொல்லை தந்த மோசடி கும்பலை போலீசார் எச்சரித்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: ஒரு சிறுவனை வார்த்தைகளை சொல்லி கடத்தி சென்றுள்ளது ஒரு கும்பல்.. அத்துடன் அந்த சிறுவனை பாலியல் தொழிலிலும் தள்ளி சித்ரவதை செய்துள்ளது. இப்படி ஒரு கொடுமை, நம்முடைய கோவை மாவட்டம் சூலூரில் நடந்துள்ளது..!!

அந்த சிறுவனுக்கு 17 வயதாகிறது.. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்.. சோஷியல் மீடியாவில் எந்நேரமும் ஆக்டிவ்வாக இருந்து வந்துள்ளார்.. அப்போதுதான், ஃபேஸ்புக்கில் ஒரு குரூப் சிறுவனிடம் நட்பு கொண்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அந்த கும்பல்.. இவர்கள் ஒரு டீமாகவே சோஷியல் மீடியாவில் செயல்பட்டு வந்துள்ளனர்..

 மைனர் சிறுவன்

மைனர் சிறுவன்

செல்போன் நம்பர்களையும் பகிர்ந்து கொண்டு, இவர்கள் நட்பு ரீதியாக பேசி வந்துள்ளதாக தெரிகிறது.. இந்த நிலையில் கடந்த வாரம் சிறுவனுக்கு அந்த கும்பல் போன் போட்டு பேசியுள்ளது.. அப்போது, ஆசை வார்த்தைகள் பல சொல்லி, சிறுவனை கோவைக்கு வருமாறு கும்பல் அழைத்துள்ளது.. அவர்கள் அனைவருமே பாசமாக பேசவும், சிறுவனும் அதை நம்பி நெல்லையில் இருந்து கிளம்பி கோவைக்கு வந்துள்ளார்... கோவை பஸ் ஸ்டாண்ட் வந்து இறங்கியதுமே, அங்கே ஒருநபர் தயாராக நின்று கொண்டிருந்தார்.. சிறுவனை பார்த்ததும் அடையாளம் கண்டுபிடித்து, அவரிடம் நெருங்கி சென்று, அறிமுகப்படுத்தி கொண்டார்..

 பள்ளப்பாளையம்

பள்ளப்பாளையம்

பிறகு, சிறுவனை அழைத்துக் கொண்டு பள்ளபாளையம் பகுதிக்கு வந்திருக்கிறார். அதுவரை சிறுவனும் தன்னுடைய நண்பர் என்றவகையில் அவரை நம்பி கொண்டிருந்தார்..ஆனால், பள்ளப்பாளையம் வந்ததுமே, அங்கிருந்த இன்னொரு கும்பலிடம் அந்த சிறுவனை ஒப்படைத்துள்ளார்.. அவர்கள் இந்த நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் தந்துள்ளார்கள்.. அதை பெற்றுக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து உடனே சென்றுவிட்டாராம்.. இதற்கு பிறகு, அந்த சிறுவனை இன்னொரு இடத்துக்கு அந்த கும்பல் அழைத்து சென்றுள்ளது.. பெண்கள் அணியும் ஆடைகளை கொடுத்து அணிய சொல்லி உள்ளார்கள்.. அந்த சிறுவனின் தலைமுடியை அலங்கரித்து இளம்பெண்போல மேக்கப் செய்துள்ளார்கள்..

 அச்சு அசல் பெண்

அச்சு அசல் பெண்

அச்சுஅசல் பெண் போலவே அந்த சிறுவனின் தோற்றத்தை மாற்றியிருக்கிறார்கள்.. இரவு நேரமாகிவிட்டால், தங்களுடன் அந்த சிறுவனை வெளியே அழைத்து செல்வார்களாம்.. சாலையோரம் சிறுவனை நிறுத்தி, ஆண்களிடம் கட்டாய வன்புணர்வு செயல்களில் ஈடுபடுத்தி கொடுமை செய்துள்ளனர்.. அதன் மூலம் அந்த கும்பல், நிறைய பணம் சம்பாதித்ததாகவும் தெரிகிறது... சிறுவன் நெல்லையில் இருந்து கிளம்பி வரும்போதே, கழுத்தில் 2 பவுன் செயின் அணிந்து வந்திருந்ததால், அந்த நகையையும் இந்த கும்பல் பறித்து கொண்டுள்ளது.. சிறுவன் வைத்திருந்த செல்போனையும் அபகரித்து கொண்டுள்ளது. இப்போது நகை, செல்போனை திருப்பி தரும்படி கேட்டால், அந்த கும்பல் தரமறுக்கிறதாம்..

 ஹைவேஸ் அக்கிரமம்

ஹைவேஸ் அக்கிரமம்

ஒருவார காலமாகவே, இரவு நேரங்களில் இந்த சித்ரவதையால், மனவேதனை அடைந்த அந்த சிறுவன், ஒருநாள் யாருக்கும் தெரியாமல், தன்னுடைய அப்பாவுக்கு ரகசியமாக, இன்னொருவர் செல்போன் மூலமாக தொடர்புகொண்டுள்ளார்.. தன்னை காப்பாற்றுமாறு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி, அத்துடன் லொக்கேஷனையும் ஷேர் செய்துள்ளார்.. இந்த மெசேஜ் பார்த்ததும் பதறிப்போன, அந்த சிறுவனின் தந்தை, குடும்பத்துடன் நெல்லையில் இருந்து கிளம்பி, கோவைக்கு வந்துள்ளனர்.. அந்த கும்பலை தேடியும் அலைந்துள்ளனர்.. சம்பந்தப்பட்ட கும்பலையும் சிறுவனின் அப்பா சந்தித்துள்ளார்.. தன்னுடைய மகனை பார்த்தீர்களா என்றும் கேட்டுள்ளார்.

 அள்ளிய போலீஸ்

அள்ளிய போலீஸ்

அதற்கு அந்த கும்பல், அப்படி ஒரு சிறுவன் தங்களிடம் இல்லை என்றும், அந்த சிறுவனை பார்த்ததே இல்லை என்றும் கூறி அந்த கும்பல் திருப்பி அனுப்பிவிட்டது... இதற்கு பிறகுதான், சிறுவனின் பெற்றோர் சூலூர் போலீசுக்கு சென்றுள்ளனர்.. மகனை காணவில்லை என்று புகாரும் அளித்தனர்.. அத்துடன், தாங்கள் இதுவரை எந்தெந்த கும்பலை தொடர்பு கொண்டு விசாரித்தோம் என்பதையும் போலீசில் சொல்லி உள்ளனர்.. இதற்கு பிறகு, போலீசார் அந்த கும்பலை ஸ்டேஷனுக்கு அள்ளி கொண்டு வந்து விசாரித்தனர்.. அப்போது அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர்.. இறுதியாக, சிறுவன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்...

 மேஜர் அட்வைஸ்

மேஜர் அட்வைஸ்

இளம்பெண் வேடத்தில் இருந்த மகனை பார்த்ததுமே, முதலில் பெற்றோருக்கு அடையாளம் தெரியவில்லை.. அதற்கு பிறகுதான், தங்கள் மகன் என்பதை அறிந்து, கதறி துடித்து கண்ணீர் விட்டனர்.. மகனை இறுக்கமாக அணைத்துக் கொண்டனர். நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் சிறுவனும் சொல்லி அழுதுள்ளார்.. அதற்கு பிறகு, பெற்றோருடனே தன்னை அனுப்பி வைக்குமாறு போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.. மேலும், சிறுவனிடமிருந்து பறித்த 2 பவுன் தங்க நகையையும், ரூ.20 ஆயிரத்தையும் அந்த கும்பல் ஸ்டேஷனிலேயே திருப்பி கொடுத்தது. இதைத்தொடர்ந்து இனிமேல் இப்படியெல்லாம் செயலில் ஈடுபடக்கூடாது என்று அந்த கும்பலை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.. சிறுவனுக்கும் நிறைய அட்வைஸ் தந்து பெற்றோருடனேயே அனுப்பியும் வைத்தனர்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+