ஆழியார் அணை நிரம்பியது.. அணை திறப்பால் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. வெள்ள அபாய எச்சரிக்கை!
கோவை: கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்ததால், ஆழியார் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்நிலையில் முழு கொள்ளளவை எட்டியதால் ஆழியார் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருவதால் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அணைகளிலும் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை செய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக சோலையார், ஆழியார், பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் ஆழியார் அணைக்கு தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் இருந்தது. நீர்வரத்து அதிகரித்தால் அதன் முழு கொள்ளளவான 120 அடியில் 119.50 அடி ஒரு சில நாட்களில் எட்டியது. பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை கடந்த ஒரு மாதத்தில் ஏற்கனவே 5 முறை நிரம்பிய நிலையில் தற்போது 6-வது முறையாக அணை நிரம்பி உள்ளது.
ஆழியார் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1, 225 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து இன்று காலை அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1, 347 கன அடி உபரி நீர் ஆழியார் ஆற்றில் திறந்து விடப்பட்டது.
தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாக பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் அபாய ஒலியானது எழுப்பப்பட்டது. ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர், ஆழியார் ஆற்றில் கரைபுரண்டு ஓடி வருகிறது. ஆழியார் நிரம்பி ஆறு பெருக்கெடுத்து ஓடி வருவதால், இந்த ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என கோவை, பொள்ளாச்சி பகுதி மக்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications