உக்கடத்தில் வரப்போகும் சூப்பர் விஷயம்.. இனி நோ டிராஃபிக் ஜாம்.. கோவை மக்களுக்கு குஷிதான்
கோவை: கோவை, உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியில் செல்லும் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகன வாகனங்களால் கடும் போக்குவரத்து நிலவி வரும் நிலையில், போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் முக்கிய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் மாவட்டத்தில் காந்திபுரம், சாயிபாபா காலனி, சிங்காநல்லூர், சூலூர், உக்கடம் பேருந்து நிலையங்கள் வெளியூர்களுக்குச் செல்லும் முக்கிய பேருந்து நிலையங்களாக உள்ளன. உக்கடம் பேருந்து நிலையதச்தில் இருந்துதான் பொள்ளாச்சி சாலையில் உள்ள பகுதிகளுக்கும், கேரள மாநிலத்துக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

உக்கடம் பேருந்து நிலையம் தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநில மக்களின் போக்குவரத்துக்கு முக்கியப் பங்காற்றி வருகிறது. கல்வி, வேலை, தொழில் என இரு மாநிலங்களுக்குச் சென்று வருவதற்கான பிரதான பகுதியாக உக்கடம் பேருந்து நிலையம் விளங்கி வருகிறது. உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றபோது தூண்கள் அமைப்பதற்காக பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக சுங்கம் செல்வதற்காக வழித்தடம் அமைப்பதற்காக பேருந்து நிலைய வளாகத்திற்குள்ளேயே தூண்கள் அமைக்கப்பட்டன. கடந்த பத்தாண்டுகளாக உக்கடம் பேருந்து நிலையம் பல்வேறு மாாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இதானல், உக்கடம் என்றாலே போக்குவரத்து நெரிசல் பிரச்னை தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் போக்குவரத்து பிரச்னையை சந்தித்து வருகின்றன.
உக்கடம் மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்திருப்பதாக தெரிந்தாலும், பேருந்து நிலைய சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே வரும்போது, இரு புறமும் வாகனங்கள் வருவ தால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் பள்ளமான அந்த பகுதியில் மழை பெய்யும்போது தண்ணீரும் தேங்கி வருகிறது.
இதனால், உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் பகுதியில் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, பேருந்துகள் வெளியே வரும்போது விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதை அதிகாரிகளும் உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்கும் வகையில் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே வரும் பகுதியில் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், உக்கடம் பகுதியில் பேருந்துகள் வெளியே வரும் சுங்கம் ரோடு பகுதியில் பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக செல்லும் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகிறது. அந்த இடம் பள்ளமாக இருப்பதால் கான்கிரீட் மூலம் உயர்த்தப்பட்டு 30 மீட்டர் நீளத்தில் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணணிகள் தொடங்கி ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மேம்பாலப் பணிகள் காரணமாக உக்கடம் பேருந்து நிலையப் பகுதியே மிகவும் மோசமடைந்ததுடன் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் பேருந்துக்காக நிற்பதற்கும், காத்திருக்கவும் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
பேருந்து நிலையத்தை நவீன முறையில் அமைக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சி சார்பில் உக்கடம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி நிர்வாகம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. இதற்காக இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 2 பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உக்கடம் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 30 பேருந்துகல் நிறுத்தும் வகையில் ரேக்குகள் அமைக்கப்படவுள்ளன. ஷாப்பிங் காம்பிளக்ஸ், கழிப்பறை, வாகன நிறுத்துமிடங்கள், பாதுகாப்பு அறை உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. அதேபோல, பேரூர் பைபாஸ் சாலையில் மற்றொரு பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications