Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவின் 50% வரி: ஜவுளி துறையில் ஏற்படப் போகும் பாதிப்பு?.. பஞ்சாலைகள் சங்க தலைவர் சுந்தர்ராமன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா பொருட்களுக்கான அமெரிக்க வரியை 50 சதவீதம் உயர்த்தி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். 50 சதவீதம் வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்தியா கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலையில், அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் ஜவுளித் துறையில் 70 சதவீதம் வரை உற்பத்தி இழப்பு ஏற்படும் என்றும், ஜவுளி பொருட்கள் தேக்கம், வேலை இழப்பு போன்றவை இப்போது ஏற்பட துவங்கி இருக்கின்றது என்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் தலைவர் சுந்தர்ராமன் தெரிவித்தார்.

கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) அலுவலகத்தில் பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரி விதிப்பை டிசம்பர் வரை ரத்து செய்வதற்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் தலைவர் சுந்தர்ராமன், பருத்தி ஜவுளி ஏற்றுமதி குழு உறுப்பினர் ரவி ஷியாம் ஆகியோருடன், பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனும் கலந்து கொண்டார்.

how-is-the-textile-industry-going-to-deal-with-the-50-us-tariff-textile-mills-association-presid

இதைத்தொடர்ந்து சைமா தலைவர் சுந்தரராமன், பருத்தி ஏற்றுமதி குழு உறுப்பினர் ரவி சாம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், இந்தியாவில் பருத்தி இறக்குமதிக்கான வரி 11 சதவீதம் என்பதை குறைக்க வேண்டும் என 3 கோரிக்கை விடுத்து இருந்தோம். இதைத்தொடர்ந்து, செப்டம்பர் 30 வரை மட்டும் இறக்குமதி வரி முதலில் ரத்து செய்யப்பட்டது.

இது போதுமானதாக இல்லை என்று மத்திய அரசிடம் நேரில் கூறியிருந்தோம். இந்நிலையில், இந்தக் கோரிக்கையை ஏற்று டிசம்பர் 31 வரை இந்திய அரசு இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்து இருக்கின்றது. இது மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது. பிரதமர் மோடி, நிதியமைச்சர், ஜவுளித் துறை அமைச்சர், வேளாண் அமைச்சர் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். எங்கள் நிலையை எடுத்துக் கூறி நிதியமைச்சரை சந்திக்க வைத்த வானதி சீனிவாசனுக்கும் நன்றி.

பருத்தி ஐவுளித் துறை மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க விதித்திருக்கும் வரி முறையானதல்ல. இந்திய ஜவுளித் துறை வலிமையாக இருக்கின்றது. இந்தியாவில் இருந்து 36 பில்லியன் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அதில் ஒரு பங்கு மட்டுமே அமெரிக்கா ஏற்றுமதி நடைபெறுகின்றது.

அமெரிக்க வரி விதிப்பு காரணமாக ஐவுளித் துறையில் பாதிப்பு இருக்கும். 40 நாடுகளுடன் மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது. உள்நாட்டில் 10 சதவீதம் வாங்குவது உயர்ந்தாலே இதை சமாளிக்க முடியும். அமெரிக்காவின் இந்த வரி விதிப்பை ஜவுளித் துறையினர் எதிர்கொள்வோம்.
அமெரிக்கா அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் வெளியில் வாங்க முடியாது, நம்மிடம்தான் வாங்கியாக வேண்டும்.

25 சதவீத டாரிப் இருந்தபோது யாரும் விலையை குறைக்க கேட்கவில்லை. 50 சதவீத டாரிப் என்றவுடன் வர்த்தகர்கள் குறைக்க கோரினர் மத்திய அரசு
27 ஆம் தேதிக்கு மேல் பேசலாம் என சொல்லி இருக்கின்றனர். அனைத்து துறையினரையும் அழைத்து ஆலோசனை நடத்த இருக்கின்றனர். வங்கிக் கடன் தள்ளி வைப்பு, வட்டி குறைப்பு , மூல பொருட்கள் கையிருப்பு போன்றவை தற்போதைய தேவை.

வரும் 2 அல்லது 3 மாதத்தில் அமெரிக்க இறக்குமதி வரி விவகாரம் சரியாகிவிடும் என நம்புகிறோம். அமெரிக்காவின் இந்த 50 சதவீத வரி உயர்வு காரணமாக, 70 சதவீதம் வரை உற்பத்தி இழப்பு ஏற்படலாம். ஐவுளி பொருட்கள் தேக்கம், வேலை இழப்பு போன்றவை ஏற்பட துவங்குகின்றது. பருத்தி இறக்குமதி வரி விலக்கு காரணமாக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.

இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேட்டியளித்தார். அப்போது, இந்திய விவசாயிகளுக்கும், தொழில் துறைக்கும் பாதிப்பு இல்லாமல் அவற்றை காப்பாற்ற அரசு நடவடிக்கைகள் எடுக்கிறது. இறக்குமதி வரி நாடு முழுமைக்கும் இருக்கும் பிரச்சினை. இதை சவாலாகவும் பார்க்கலாம். புதிய வாய்ப்பாகவும் பார்க்கலாம். தாக்கம் எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள இந்திய அரசு தயாராக இருக்கின்றது.

விரைவில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த இருக்கின்றோம். நம்மால் சமாளிக்க முடிகின்ற சூழல்தான் இப்போது இருக்கின்றது. கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில்களையும் ஒருங்கிணைத்து முதலில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+