கோவையில் அவிநாசி சாலை, சக்தி சாலை.. மெட்ரோ ரயிலின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்க போகுது.. மெகா பிளான்!
கோவை: கோவையில் மெட்ரோ ரயில் வழித்தடம் தொலைநோக்கு பார்வையுடன் அமையப்போகிறது. தமிழக அரசிடம் 15ம் தேதி விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட உள்ள நிலையில் இன்று கோவையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ல், தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் சித்திக் தலைமையில் கலெக்டர் கிராந்தி குமார் முன்னிலையில் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை வரும் 15-ம் தேதி தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இன்று விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய கோவையில் வெவ்வேறு இடங்களில் அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர்.
சரி, கோவையில் மெட்ரோ ரயில் வழித்தடம் எப்படி அமையப்போகிறது என்பதை பார்ப்போம்.. கோவையில் மெட்ரோ ரயில் வழித்தடம் முதலில் இரண்டு வழித்தடங்களில் அமையப்போகிறது. அது இரண்டுமே மிகவும் முக்கியமான வழித்தடம் ஆகும். கோவை மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 5 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
முதல் வழித்தடம் அவிநாசி ரோட்டில் அமைகிறது. கோவை வெள்ளலூரில் துவங்கி கணியூர் சுங்கச்சாவடி அருகே முடிவடைகிறது. இரண்டாம் வழித்தடம், கலெக்டர் ஆபீசில் துவங்கி, சத்தி ரோடு வழியாக கணேசபுரத்தில் முடிவடைகிறது. இந்த இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் உடனே நடத்தப்பட உள்ளது. இதற்காக வெள்ளலூரில் 50 ஏக்கர் மாநகராட்சி நிலம் எடுக்கப்படவுள்ளது.
3வது வழித்தடம் கோவை ரயில்வே சந்திப்பில் துவங்கி, திருச்சி ரோடு வழியாக காரணம்பேட்டை வரை, மெட்ரோ ரயில் தடம் அமைக்கப்படவுள்ளது. இதில் மெட்ரோ ஸ்டேஷன்களுக்காக ஒண்டிப்புதூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை இடம் உட்பட சில இடங்கள், கையகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐந்தாவது வழித்தடம் மேட்டுப்பாளையம் ரோட்டில் அமையவுள்ளது. கோவை ரயில்வே சந்திப்பில் துவங்கி, பிளிச்சி வரை இந்த வழித்தடம் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர டவுன்ஹாலில் துவங்கி சிறுவாணி ரோடு வழியாக, காருண்யா நகர் வரையிலும் மற்றொரு மெட்ரோ ரயில் தடத்திற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதுதவிர கோவை நகருடன் பொள்ளாச்சி, பாலக்காடு நகரங்களை இணைக்கும் வகையில், இவ்விரண்டு ரோடுகளிலும் மெட்ரோ ரயில் தடம் அமைக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான ஆலோசனை குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, கோவையில் அவிநாசி சாலை மற்றும் சக்தி சாலையில் 39 கிலோமீட்டர் நீளத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். கோவையில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய போகிறது.
அவிநாசி சாலையில் விமான நிலையம் அமைந்துள்ள இடத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும். நீலம்பூர் அருகே புதிதாக அமைக்கப்பட உள்ள பஸ் ஸ்டாண்ட் அருகே மெட்ரோ முடியும் வகையிலும் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படும் என்றார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications