கவுசல்யா மீது ஓவர் சந்தேகம்.. கொலை செய்து.. மூட்டை கட்டி கிணற்றில் போட்ட கணவன்!
பொள்ளாச்சி அருகே மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்
Recommended Video
பொள்ளாச்சி: "கவுசல்யா மேல் எனக்கு இருந்த சந்தேகம் போகவே இல்லை.. அதனால்தான் கொலை பண்ணி மூட்டை கட்டி கிணத்துக்குள்ளே போட்டுட்டேன்" என்று கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே ஆர்.பொன்னாபுரம் என்ற இடத்தில் வசித்து வருபவர் சக்திவேல். கூலி வேலை செய்கிறார். மனைவி பெயர் கவுசல்யா. கல்யாணம் ஆகி 8 வருடம் ஆன நிலையில் 7 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.
இந்நிலையில், கவுசல்யாவை காணவில்லை என்று பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தார். மேலும் இன்னொருவருடன் மனைவிக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இது சம்பந்தமாக விசாரித்து வந்தனர்.

விசாரணை
ஆனால் கவுசல்யாவின் கள்ள உறவு பற்றின எந்த துப்பும் போலீசுக்கு கிடைக்கவில்லை. ஆனால் கணவன்-மனைவி இடையே நிறைய தகராறும், சண்டையும் நடந்திருக்கிறது என்பது தெரியவில்லை. இதனால் புகார் அளித்த கணவன் மீது சந்தேக அடைந்த போலீசார் சக்திவேலை கைது செய்து துருவி துருவி விசாரித்தனர்.

நடவடிக்கை
அப்போதுதான் விஷயம் வெளிப்பட்டது. போலீசரிடம் வாக்குமூலத்தில் சொன்னதாவது: "நான் தோட்டத்தில் பூச்சி மருந்து அடிக்கும் வேலை பார்க்கிறேன். வேலை செய்ற இடத்துலதான் கவுசல்யாவை முதன்முதலா பார்த்தேன். ஒருத்தருக்கொருத்தர் விரும்பிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனால் கவுசல்யா நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் வந்தது.

தகராறு
அதனால கண்டித்தும் கேட்கல. இதை வெச்சே எங்களுக்குள்ள தகராறு வரும். இப்படித்தான், ஜூலை 26-ம் தேதியும் சண்டை வந்துவிட்டது. அப்போது கவுசல்யா தப்பி ஓட முயன்றபோது, கல்லை தூக்கி தலையிலேயே போட்டேன். அவள் கீழே விழுந்ததும், நான் கழுத்தை பிடிச்சி நெரித்தேன், இதில் உயிர் போய்விட்டது.

சாக்குமூட்டை
அப்பறம்தான் ஒரு மூட்டை எடுத்து அதில் பிணத்தை கட்டி கிணத்துல போட்டடேன். மாமியார் வீட்டுல வந்து கேட்டதுக்கு நடத்தை சரியில்லைன்னு சொல்லி, நானும் கூட சேர்ந்து அழுதேன். போலீசிலும் அப்படித்தான் புகார் தந்தேன்" என்றார்.

கைது
இதையடுத்து, பிணத்தை வீசியதாக சொல்லப்பட்ட கிணற்றில் இருந்து கவுசல்யாவின் பிணத்தை போலீசார் கைப்பற்றினர். ஒரு மாத கால அழுகிய நிலையில் சடலம் வெளியே எடுத்து, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications