கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கறுப்புப் பணத்தை ஒழிக்கவில்லை.. வெள்ளை பணத்தை ஒழித்துவிட்டார் மோடி.. ஸ்டாலின் விமர்சனம்

Google Oneindia Tamil News

சூலூர்: கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி, வெள்ளைப் பணத்தை ஒழித்தவர் பிரதமர் மோடி என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Instead of abolishing black money, Modi wiped out white money Says Stalin

தென்னம்பாளையம், வரகன்பாளையம், கருமுத்தம் பட்டி, சோமனூர் உள்ளிட்ட இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார். மெஜாரிட்டி இல்லாத நிலையில், மத்திய அரசு முட்டுக் கொடுத்து வருவதால் அ.தி.மு.க. ஆட்சி நீடித்து வருவதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல தீர்ப்பை தந்து இருப்பீர்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி, வெள்ளைப் பணத்தை ஒழித்தவர் மோடி என்றும், மக்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்தவர் மோடி என்றும் விமர்சனம் செய்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கியவருக்கு 2 நாள் சிறை... டெல்லி நீதிமன்றம் உத்தரவு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கியவருக்கு 2 நாள் சிறை... டெல்லி நீதிமன்றம் உத்தரவு

துக்ளக் ஆட்சி, சர்வாதிகார ஆட்சியை நரேந்திர மோடி நடத்துகிறார் என்றும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதிக்கு முன்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவை எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர்,119 உறுப்பினர்கள் திமுக அணியில் இருப்பார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

English summary
MK Stalin Campaign That Instead of abolishing black money, Modi wiped out white money
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X