என்னாது நாங்கள் ஜெயிச்சா மோடி வந்துடுவாரா? அவர் ஜெயித்து கவுன்சிலராக போகிறாரா என்ன?.. கமல் கேள்வி
கோவை: பிரதமர் மோடி ஜெயித்து கவுன்சிலராக போகிறாரா என்ன என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.
இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது. மதுரை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், தான் சிறுவயதில் பார்த்த மதுரையில் சிறிய மாற்றம் மட்டுமே இருக்கிறது.

மதுரை மாநகராட்சி
மற்றபடி இந்த மதுரை மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி என எப்படி சொல்கிறார்கள் என தெரியவில்லை என்றார். நேற்றைய தினம் கோவையில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சட்டசபைத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

கிராம சபை
ஊடகங்கள் மையமாக இருக்க வேண்டும். கிராம சபையை போல் ஏரியா கமிட்டி நடப்பதை உறுதி செய்தேன் என்றும் கூறினார். அப்போது பாஜகவின் பி டீம்தான் கமல் கட்சி என்றும் கமல் கட்சியினர் ஜெயித்தால் மோடி வந்துவிடுவார் என சிலர் பிரச்சாரம் செய்வது குறித்து கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் மோடி ஜெயித்து கவுன்சிலர் ஆக போகிறாரா என எதிர்கேள்வி எழுப்பினார்.

மோடிக்காகவா நான் வந்தேன்
மேலும் தொடர்கையில் மோடி வெற்றி பெறுவதற்காகவா நான் இங்கு வந்தேன். மோடி வென்றாலும் தோற்றாலும் எனக்கு அதை பற்றியெல்லாம் கவலையில்லை. தமிழகம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. மோடி எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதற்கான உத்தியெல்லாம் அவர் வைத்துள்ளார்.

பலிக்கக் கூடாது
அந்த உத்தியெல்லாம் பலிக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய ஆசையே தவிர அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நான் எதுவும் செய்ய மாட்டேன். ஏற்கெனவே மக்கள் நீதி மய்யத்தை பி டீம் என சொல்லி பார்த்தனர். பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் இப்போது இப்படியெல்லாம் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

மோடி எப்படி கவுன்சிலராக வருவார்
மோடி எப்படி கவுன்சிலராக வருவார். கவுன்சிலர் போட்டி என்பது நாம் நமது நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும் செய்யும் வேலை. எனவே அவர்கள் எல்லாம் இதில் என்ன நடக்கிறது என்பது குறித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களே தவிர, இதுக்கெல்லாம் ஆசைபடமாட்டார்கள். இதிலிருந்து அவர்களது வெற்றி ஊர்ஜிதமாகாது என்று தெரியும். கால்வாய் கால்வாயாக வெட்டி வயிறை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இது இரண்டு கழகங்களுக்கும் பொருந்தும்.

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். கோவையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், கொடுத்த வாக்குறுதிகளை ஒரு வருட காலத்துக்குள் நிறைவேற்றவில்லை என்றால், தன்னுடை பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன் என்று வீடுதோறும், உறுதிமொழி அளித்திருக்கிறார். இதுதான் நேர்மையின் மீது எங்கள் வேட்பாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கை. அது எனக்கும் இருக்கிறது, இதையேதான் நான் அவர்களுக்கு அறிவுரையாக கூறியிருக்கிறேன் என்றார் கமல்ஹாசன்.
-
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications