'திருடனுக்கு தேள் கொட்டியது போல்'.. காதலனுடன் எல்லை மீறிய இளம் பெண்.. பக்கத்து வீட்டில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கோவை: கேரள மாநிலம் கண்ணூரில் 'திருடனுக்கு தேள் கொட்டியது போல்'.. பெண் ஒருவர் சிக்க வைக்கப்பட்டிருந்தார்.. எப்படி என்றால், இளம் பெண் ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் கணவருக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். அவருடன் எல்லை மீறி பழகியதால், அடிக்கடி வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். அதனை பக்கத்து வீட்டில் இருந்து இருந்த இரண்டு பேர் கண்டுபிடித்தனர். அதனை வீடியோ எடுத்து பணம் பறித்து சினிமா பாணியில் வாழ்ந்துள்ளார். இறுதியில் அவர்களுக்கு ட்விஸ்ட் காத்திருந்தது.

திருட்டு பயலே திரைப்படத்தில் நடிகை மாளவிகா, நடிகர் அப்பாஸ் உடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பார். தனது நண்பனின் மனைவியுடன் இருப்பார். ஒரு நாள் அவர்கள் தனிமையில் இருக்கும் போது, நடிகர் ஜீவன் பார்த்துவிடுவார். அவர்களை வீடியோ எடுத்து வைத்துக்கொள்வார்.

Kerala 2 arrested for blackmailing woman after taking photos of her having fun with someone else

அதன் பின்னர் மாளவிகாவை மிரட்டி அடிக்கடி பணம் பறிப்பார். சொகுசு வாழ்க்கை வாழ்வார், இறுதியில் அவருக்கு, மாளவிகாவின் கணவரால் சிக்கல் வரும். அதேபோன்று தான், திருமணமான பெண், வேறொருவருடன் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த 2 பேருக்கு , இறுதியாக போலீசாரால் சிக்கல் வந்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பள்ளிதட்டு அடுத்த ராஜிபவன் உண்ணதி பகுதியை சேர்ந்த 21 வயதாகும் சமல் வசித்து வருகிறார். இவரது நண்பர் சரியாண்டி நகரத்து பகுதியை சேர்ந்த 48 வயதாகும் லத்தீப்.இவர்கள் ஒன்றாக ஜாலியாக சுற்றுவார்களாம். சமலின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் திருமணமான பெண்ணுக்கு, ஆலக்கோடு பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர் அடிக்கடி பெண்ணின் வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த சமல் மற்றும் அவரது சகோதரர் ஷியாம் ஆகியோர் பெண்ணும், அந்த நபரும் உல்லாசமாக இருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்திருக்கிறார். இதையடுத்து அதனை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் காண்பித்து மிரட்டி கொஞ்சம், கொஞ்சமாக பலமுறை பணம் பறித்துள்ளனர். இதற்கிடையே ஷியாம் வேறு ஒரு வழக்கில் போலீசாரால் கைதாகி சிறையில் இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து சமல், பெண்ணின் படத்தை லத்தீப்பின் செல்போனுக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதையடுத்து லத்தீப், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் அந்த படத்தை காண்பித்து பணம் கேட்டதுடன், தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினாராம். பணம் கேட்டவரை கொடுத்து வந்த அந்த இளம் பெண், ஆசைக்கு இணங்குமாறு கேட்டதால், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இதையடுத்து குடியான்மலை போலீசில் புகார் அளித்தார்கள். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சமல், லத்தீப்பை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை கண்ணூர் முதல் வகுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+