டிக் அடித்த செந்தில்பாலாஜி.. பஸ்ஸிலேயே சென்று முதல்வரை சந்தித்த.. கோவை மேயர் கல்பனா.. பதவியேற்பு
செந்தில் பாலாஜி கோவை மேயர் கல்பனாவுக்கு வாழ்த்து கூறினார்
கோவை: சாமானியர்களும் மேயர், துணை மேயராக முடியும் என்பதை உணர்த்தும் விதமாக கோவையில் மேயர், துணை மேயரை கட்சி தலைமை அறிவித்துள்ளது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம் தெரிவித்தார்.. 15 ஆண்டு காலமாக 13 ஆயிரம் ரூபாய்க்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் மேயர் கல்பனா என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக், தன்னுடைய மனைவி லக்குமி இளஞ்செல்வியை வேட்பாளராக நிறுத்தினார்..
அதேபோல, புறநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தனது மகள் நிவேதாவை முன்னிறுத்தினார்... இருவருமே தங்களது சாதியையும் கூடுதல் பலமாக முன்னிறுத்தினர்.

அதிருப்தி
ஆனால், தேர்தல் உள்ளடி வேலை காரணமாக மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்மீது செந்தில் பாலாஜிக்கு அதிருப்தி இருந்தது.. அதனால், சர்ச்சையில் சிக்காத ஒருவரும், அதேசமயம், தனக்கு நிகராக யாரும் வந்துவிடாத அளவுக்கு எளிமையான ஒருவரை தேடியபோதுதான், 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா கிடைத்தார்.

விசுவாசம்
10-ம் வகுப்புதான் படித்தவர்.. விசுவாசமானவர்.. கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்.. விசுவாசமாக இருப்பார்.. கோவை முன்னாள் மேயராக இருந்த கணபதி ராஜ்குமார் ஆகியோரின் உறவினர் என்பதால் இவர் பெயரையே செந்தில் பாலாஜி ஓகே சொன்னார்.. இவர் பெயரை அறிவித்ததுமே, எளிய உறுப்பினரை மேயராக்கும் முயற்சிக்கு வரவேற்பும் பரவ ஆரம்பித்தது..

மேயர் பதவியேற்பு
இந்நிலையில், கோவை மாநகராட்சி விக்டோரியா ஹால் மாமன்ற கூட்டத்தில், கோவை மேயராக கல்பனா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.. இதையடுத்து, கல்பனா பொறுப்பேற்றும் கொண்டார்... மேயர் பதவியேற்பு நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டதும், கல்பனாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது செந்தில்பாலாஜி சொன்னதாவது:

மணிமகுடம்
திமுக அரசின் 9 மாத திட்டங்களுக்கு மணிமகுடமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது.. கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியினை முதல்வர் வழங்கி வருகின்றார்.. கோவை மாவட்டத்தில் மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி இருக்கின்றனர்.. கோவையின் மேயரை ஒரு மனதாக தேர்வு செய்து இருக்கின்றனர் .. மேயராக தேர்வு செய்யப்பட்ட கல்பனா எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர்.. 15 ஆண்டு காலமாக 13 ஆயிரம் ரூபாய்க்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.. கல்பனாவின் கணவர் கால்டாக்ஸி ஓட்டுனராக வேலை பார்த்து, இப்போது இ சேவை மையம் நடத்தி வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின்
கல்பனா வெற்றி பெற்ற பிறகு, பஸ்ஸில்தான் பயணித்து தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.. அவரது குடும்பம் திமுக இயக்கத்திற்கும், மிசா காலத்திலும் உறுதுணையாக இருந்த குடும்பம்.. மக்கள் இன்ப துன்பங்களை அறிந்த சாமானியர்களை மேயர், துணை மேயராக முதல்வர் ஸ்டாலின்.. வெற்றி செல்வன் துணை மேயர் தேர்தலில் போட்யிடுகின்றார்.. வட்ட கழக செயலாளராக இருந்தவர் துணைமேயராக தேர்வு செய்யப்பட இருக்கின்றார்.

துணை மேயர்
திமுகவில் நிறைய பேர் பெரிய பொறுப்பில் இருந்தபடி மேயர், துணை மேயர் பதவிகளை எதிர்பார்த்த வேளையில்,சாமானியர்கள் மேயர்,துணை மேயராக முடியும் என்பதை திமுக தலைமை காட்டியிருக்கின்றது... திமுகவில் கவுன்சிலராக தேர்வானவர்கள் மன்றத்திற்கு புதியவர்கள் என்றாலும், இயக்கத்தில் மக்களோடு இணக்கமாக இருந்தவர்கள்.. தேவை ஏற்பட்டால் அவர்களுக்கு பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றார் செந்தில் பாலாஜி.












Click it and Unblock the Notifications