கோவை கோணியம்மன் கோயில்ல யார் பாருங்க.. "கடவுளே, திமுகவுக்கு நல்ல புத்தி கொடு".. இப்படியொரு வேண்டுதலா

Subscribe to Oneindia Tamil

கோவை: திமுக அரசை தொடர்ந்து விமர்சித்து கொண்டிருக்கும் இந்து முன்னணியினர், தற்போது செய்திருக்கும் இந்த செயல்பாடும், வழிபாடும் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.. குறிப்பாக, திமுகவினரின் கவனத்தை பெற்று வருகிறது.. அப்படியென்ன நடந்தது கோவை கோயிலில்?

இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக, திமுக அரசு விரோதமாக செயல்பட்டு வருவதாக இந்து முன்னணி தொடர்ந்து புகார் சொல்லிக்கொண்டிருக்கிறது.. அதேபோல தமிழகத்தின் கோயில்களில் நடக்கும் உண்டியல் திருட்டுக்கள் குறித்தும், விடாமல் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறது.

Kovai Coimbatore

பக்தர்கள்: இதற்கு நடுவில், கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பக்தர்களை ஒன்றிணைத்து தமிழகம் முழுவதும் சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தது.

எமர்ஜென்சி காலத்தைக்காட்டிலும் மோசமாக, திமுக அரசின் நடவடிக்கை இருக்கிறது. இவங்க இப்படியே தொடர்ந்து ஆட்சியில் செயல்பட்டால், வரும் காலத்தில் காணாமலேயே போய் விடும்.. இந்துக்களுக்கு மட்டும் திமுக அரசு விரோதமாக நடக்கிறது. இந்து கோவில்களை மட்டும் இடிக்கிறார்கள். கோவில் சொத்துகளை உடனடியாக நாம் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கொந்தளித்து கூறி வருகிறார்.

இந்து முன்னணி: இப்படிப்பட்ட சூழலில், திடீரென கோவை கோனியம்மன் கோவிலுக்குள் நுழைந்த இந்து முன்னணியினர் வழிபாடு நடத்தினார்கள்.. இந்து விரோத திமுக அரசுக்கு நல்ல புத்தியைக்கொடு என்று இந்த முன்னணியினர் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் இந்த வேண்டுதல் நடத்தப்பட்டது. வழிபாட்டுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காடேஸ்வர சுப்பிரமணியம் சொன்னதாவது:

"வங்கதேசத்தில் மாணவர்கள் போராடி கொண்டிருக்கிறார்கள்.. அது அவர்கள் உரிமை... ஆனால், இதை பயன்படுத்தி, இந்துக்களின் வீடு, கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது... இந்து பெண்கள் நிர்வாணம் செய்யப்படுகின்றனர்.. பலாத்காரம் செய்யப்படுகின்றனர்... இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடும் கண்டனம்: வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு உலகம் முழுக்க கண்டனம் எழுந்துள்ளது... லண்டனில் கண்டனப் பேரணி நடத்தியிருக்கிறார்கள்.. அமெரிக்காவும் இதை கண்டித்திருக்கிறது.

எனவே முன்னணி சார்பிலும், வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, காவல் துறையிடம் அனுமதி கேட்டோம். ஆனால், போலீஸ் மறுத்துவிட்டது.. பலமுறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறோம்.. ஆனால், இந்த முறை அதையும் செய்யவில்லை. அனுமதி மறுத்த திமுக அரசுக்கு எதிராக, கோர்ட் மூலம் அனுமதி பெற்று, ஆர்ப்பாட்டம் நடத்தப்போகிறோம்.. அதற்காகவே ஆர்ப்பாட்டம் ஒத்துவைக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு: இந்து விரோத திமுக அரசுக்கு, நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று கோனியம்மனை வேண்டிக்கொண்டிருக்கிறோம்" என்றார் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்.

தமிழக அரசை இந்து முன்னணி தொடர்ந்து விமர்சித்து கொண்டிருப்பதையும், கோவையில் நடந்த இந்த விசேஷ வேண்டுதலையும், திமுகவும் உற்று கவனித்தே வருகிறது.. !!

கண்டனம்: இதனிடையே, இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து அந்த அமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில், இந்து முன்னணியின் மாநில செயலாளர் மணலி மனோகர், மாநில செய்தி தொடர்பாளர் ஏ.டி. இளங்கோவன் ஆகியோர் சொன்னதாவது:

வங்கதேச இந்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு இந்து முன்னணி 5 நாட்களுக்கு முன்பு காவல்துறையிடம் மனு அளித்தது. ஆனால், காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

நீதிமன்றம்: மனிதாபிமானமில்லாமல் வன்முறை நடக்கும் வங்கதேசத்தில் கூட இந்துக்கள் ஆயிரக்கணக்கில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் நடக்கும் காட்டாட்சி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு ஜனநாயகத்திற்கு எதிராக, வங்கதேச இந்துக்கள் பாதுகாப்பை வலியுறுத்த ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி பேரியக்கத்துக்கு தமிழ்நாடு முழுவதும் அனுமதி மறுத்து உள்ளது. ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறது இந்து முன்னணி" என்று தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+