Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழுகிய பிணம்.. நடு வீட்டில் எலும்புக்கூடு.. என்ஜீனியரை எரித்தது இவர்கள்தான்.. 4 பேர் சிக்கினர்!

என்ஜினியரை எரித்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

கோவை: நடுவீட்டில் தேங்காய் சிரட்டையை போட்டு எரித்து.. எலும்புக்கூடாக.. கண்டெடுக்கப்பட்ட என்ஜினியரை கொன்றவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்!

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி சக்திவேல் - அழகு.. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்... பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார் சக்திவேல்.. 42 வயதாகிறது..3 வருஷங்களுக்கு முன்பு கோவைக்கே வந்து வேலை பார்த்தார் சக்திவேல்.

இவர் கோவை வந்ததில் இருந்தே மனைவியுடன் அடிக்கடி தகராறு வந்து கொண்டே இருந்தது. இதனால் மனைவியை பிரிந்து தனியாக வந்து விட்டார்.. சொந்த பந்தங்களை வெறுத்தார்... யாருடனும் பேசாமல் ஒதுங்கியே இருந்தநிலையில், தன் அக்காவிடம் மட்டும் அடிக்கடி போன் பேசுவார்.

மாமா.. மாமா

மாமா.. மாமா

ஆனால் 6 மாசமாக அக்காவுக்கு போனும் பண்ணவில்லை.. இதனால் தம்பிக்கு என்ன ஆனதோ என்று பயந்து, அவர் தன் மகன் தினேஷை கோவை அனுப்பி வைத்து, என்ன ஏதென்று பார்க்க சொன்னார். தினேஷ் சக்திவேல் வீட்டுக்கு வந்து "மாமா, மாமா எங்க இருக்கீங்க மாமா" என்று தேடியபோதுதான், சக்திவேல் தீயில் எரிந்து கருகி எலும்புக்கூடாக கிடந்ததை பார்த்து கதறினார்.

தேங்காய் சிரட்டைகள்

தேங்காய் சிரட்டைகள்

உடனடியாக குனியமுத்தூர் போலீசில் புகார் தரப்பட்டு, விசாரணையும் ஆரம்பமானது.. எப்படியும் இவர் இறந்து 4 மாதங்களுக்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள்.. கை, காலை கட்டிபோட்டு எரித்துள்ளனராம்.. கோணிப்பை, தேங்காய் சிரட்டைகள், காகிதங்களை சடலத்தின் மீது கொட்டி, அதன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்றுள்ளனர்.

பிணவாடை

பிணவாடை

சடலத்தை எரித்த வாடையும் வெளியே வரவில்லை.. அழுகி போன பிணவாடையும் வெளியே வரகாணோம்.. எப்பவுமே சக்திவேல் வீட்டில் புழக்கம் இல்லாததால், வீடு சுத்தமாக இருக்காதாம்.. ஒருவித வாடை வந்துகொண்டே இருப்பதால், பிண வாடைகூட அக்கம்பக்கத்தினருக்கு தெரியாமல் போயிற்று என்றார்களாம்..

விசாரணை

விசாரணை

கொலையாளிகளை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்தது.. குறிப்பாக சக்திவேலின் எதிர் வீட்டுக்காரர் ஆனந்த்குமார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்ததால், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.

குடிபோதை

குடிபோதை

அப்போதுதான் திடுக் தகவல்கள் வெளியாகின.. தன் வீட்டின் அருகே இருந்த மரத்தை ஆனந்த்குமார் வெட்டியுள்ளார். மரத்தை ஏன் வெட்டினாய் என்று கேட்டுதான் சக்திவேலுக்கும், ஆனந்தகுமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும், குடிபோதையில் வந்த ஆனந்த்குமார் தனது நண்பர்களுடன் சக்திவேலிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கைது

கைது

அப்போதுதான், சக்திவேலை கட்டையால் தாக்கிக் கொலை செய்துவிட்டு வீட்டுக்குள்ளேயே மண்ணெண்ணெய் ஊற்றி தேங்காய் சிரட்டையால் எரித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக ஆனந்த்குமார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+