லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரம்! ஆயிரக்கணக்கான கோடிகளில் வரி! மலைக்க வைக்கும் மார்ட்டின்!
கோவை: தங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது அமலாக்கத்துறையே அல்ல என்றும் ஆயிரக்கணக்கான கோடிகளில் மத்திய மாநில அரசுகளுக்கு வரி செலுத்தி வருகிறோம் எனவும் லாட்டரி மார்ட்டின் குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், இந்தியாவில் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வருவதாகவும் சோதனையை மையப்படுத்தி கற்பனைக்கு அப்பாற்பட்ட விபரங்கள் வெளியிடப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக லாட்டரி மார்ட்டின் குழுமம் விடுத்துள்ள விளக்கம் வருமாறு;

மார்ட்டின் குழுமம்: ''மார்ட்டின் குழும நிறுவனத்திற்கு சொந்தமான இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 12 ஆம் தேதி காலை 7 மணி முதல் 16 ம் தேதி காலை 10 மணி வரை வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்தியா முழுவதும் உள்ள எங்களது குழும நிறுவனங்களில் அமலாக்கத் துறையால் சோதனை நடத்தப்படவில்லை. மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் இயங்கி வரும் வருமான வரித்துறையினர் தான் சோதனை நடத்தினர். இதற்காக எங்கள் நிறுவனங்களின் அதிகாரிகள் ஒத்துழைப்பை முழுமையாக வழங்கினர்.''
உண்மைக்கு புறம்பானது: ''சட்ட விரோத பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) விதிகளின் கீழ் அமலாக்க துறையால் சோதனை நடத்தப்பட்டது என்று பல்வேறு செய்தி சேனல்கள், அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் உண்மைக்கு மாறான, அவதூறான பல்வேறு தகவல்களை செய்தியாக வெளியிட்டுள்ளனர். செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை அமலாக்க துறை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்டது என ஊடகங்கள் கூறுவது உண்மைக்கு புறம்பானதும் மற்றும் பொய்யானதும் ஆகும்.''
எல்லாமே முறைப்படி: ''சட்டப்படி அந்தந்த மாநில லாட்டரி விதிகளுக்கு இணங்க, இந்தியாவில் லாட்டர் வர்த்தகத்தை ஒழுங்கமைக்கவும், நடத்தவும் மாநில அரசுகள் பெற்றுள்ள அதிகாரத்தின் படியும், இயற்றப்பட்ட விதிகளின்படியும், முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு எங்கள் நிறுவனங்கள் இந்தியாவில் மாநில அரசாங்க லாட்டரிகளை லாட்டரி வர்த்தகம் அனுமதிக்கப்பட்ட மாநிலங்களில் விற்கின்றன. மேலும் மாநில அரசுகளால் அரசிதழில் வெளியீட்டு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு இணங்க விதிகளின்படி செயல்பட்டு வருகிறது.''
இந்தியாவிலேயே அதிகமாக: ''மார்ட்டின் கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிகமாக தனிநபர் வருமான வரியாக தோராயமாக ரூ.100 கோடியை செலுத்தியுள்ளார். எங்களது குழும நிறுவனங்கள் ஜூலை, 2017 முதல் செப், 2023 வரை ஜி.எஸ்.டியாக ரூ.23,119 கோடிகள் மத்திய மாநில, அரசுகளுக்கு வரியாக செலுத்தியுள்ளோம். ஆண்டுக்கு சுமார் ரூ.5,000 கோடிகளை ஜி.எஸ்.டி வரியாக செலுத்தியுள்ளோம். இதுவரை வருமான வரியாக ரூ.4,577 கோடிகள் மற்றும் முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரியாக சுமார் ரூ.600 கோடிகளை இந்திய அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தியுள்ளோம். இதனை சோதனையின் போது அதிகாரிகளுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.''
லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு: ''இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வருகிறோம். ஆனால் வருமான வரித்துறை சோதனை தொடர்பான உண்மைகளை மிகைப்படுத்தி, தவறாக சித்தரித்து மார்ட்டின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கற்பனைக்கு அப்பாற்பட்ட விபரங்களை செய்தியாக வெளியீடுவது எங்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதோடு மட்டுமல்லாமல், மக்களிடத்தில் எங்களைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாக அமைந்துள்ளது. '''
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications