அசையவே இல்லை.. கருப்பு கலர் கண்ணாடி.. தெறித்து ஓடிய ஜனம்.. காரை திறந்து பார்த்தால்.. திக் திக் கோவை
மேட்டுப்பாளையத்தில் 4 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த மர்ம காரால் பரபரப்பு ஏற்பட்டது
கோவை: 4 நாட்களாகவே அசையாமல் நின்று கொண்டிருந்தது அந்த மர்ம கார்.. அதை பார்த்துமே கோவை மக்களுக்கு பீதியும் கலக்கமும் சூழ்ந்துவிட்டது.
கோவையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதல் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
மேலும், கோவையில் கார் வெடி விபத்தில் இறந்த நபரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்ஃயூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளதாகவும், இந்த தகவலை காவல்துறை இன்னும் தெரிவிக்கவில்லை, தமிழக அரசு ஏன் இந்த தகவலை வெளியிட மறுக்கிறது என்று தெரியவில்லை என்றெல்லாம் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

திக்.. திக் 12 மணி நேரம்
கோவை வெடிகுண்டு சம்பவத்தில் திமுக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு தலையிட வேண்டிய நிலை வரும் என்று மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணனும் தெரிவித்துள்ளார்.. ஆனாலும், காவல்துறை இந்த விவகாரத்தை சரியாக கையாண்டு வருவதாகவும், அதனால்தான் 12 மணி நேரத்திலேயே குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கைது செய்ய முடிந்ததாகவும், அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும், கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தின் பரபரப்பும், சலசலப்பும் இன்னமும் அடங்கவில்லை.

ரிஜிஸ்டிரேஷன்
மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியையும் மேற்கொண்டு வருகிறார்கள். அப்படித்தான், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்து நிலையில், ஒரு மர்ம கார் அங்கிருந்த பொதுமக்கள் கண்ணில் பட்டுள்ளது.. மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோட்டில் உள்ள சாமில் முன்பு அந்த கார் நின்று கொண்டிருந்தது.. கடந்த 4 நாட்களாகவே, அந்த கார் அங்கேயேதான் நின்று கொண்டிருந்ததாம்.. சென்னை ரிஜிஸ்டிரேஷன் நம்பர் பொருத்தப்பட்டிருந்தது.. இந்த காரை பார்த்துமே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்...

கருப்பு கலர் கண்ணாடி
போலீசாரும் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்... ஆனால், கார் கண்ணாடியில் ஸ்டிக்கர் கருப்பு கலரில் ஒட்டப்பட்டு இருந்ததால் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை... அதனால், போலீசார் உடனடியாக, வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் சொன்னார்கள்.. வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.. பிறகு, மெட்டல் டிடக்டர் உதவியுடன் காரை சோதனை செய்தனர்... அப்போதுதான் காருக்குள் எதுவும் இல்லை என்பது உறுதியானது.. இறுதியாக, கார் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து பார்த்தனர்... காரில் ஒட்டப்பட்டு இருந்த ஒர்க்ஷாப் அட்ரஸுக்கு போனை போட்டு போலீசார் பேசினர்..

ஓனர் + சக்கரம்
அப்போது அந்த கார் மேட்டுப்பாளையம் காமராஜர் நகரை சேர்ந்த காய்கறி வியாபாரிக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. அதற்கு பிறகு, அந்த கார் ஓனருக்கு போலீசார் தொடர்பு கொண்டு பேசினர்... அப்போது காரின் சக்கரம் ரிப்பேர் ஆகிவிட்டதாம்.. சக்கரம் இயங்காததாலும், தீபாவளி பண்டிகை என்பதால், மெக்கானிக் யாரும் கிடைக்காததாலும், அங்கேயே நிறுத்திவிட்டு, அந்த ஓனர் வீட்டுக்கு போய்விட்டதாக விளக்கம் தந்தார்.. அதற்கு பிறகுதான், போலீசார் காரை அப்புறப்படுத்தினர். 4 நாட்களாகவே ஒரே இடத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்த காரால் அந்த பகுதி மக்கள் வெலவெலத்து போய்விட்டனர்..!!!












Click it and Unblock the Notifications