39 தொகுதிகள்.. 1.50 லட்சம் பெண்கள்.. கொங்கு மண்டலத்தில் திமுக மகளிரணியின் மாஸ் மாநாடு
கோவை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து திமுக அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த முறையும் தேர்தலில் வெற்றி பெற திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. தொகுதி வாரியாக நிர்வாகிகளிடன் ஒன் டு ஒன், இளைஞரணி மாநாடு, மகளிரணி மாநாடு, பூத் கமிட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வருகிற டிசம்பர் 29 ஆம் தேதி திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் 39 தொகுதிகளில் இருந்து 1.50 லட்சம் மகளிர் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கு ஷார்ப்பாக ஸ்கெட்ச் போட்டப்பட்டு வருகிறது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இந்தமுறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். கொங்கு மண்டல அரசியலில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
தவெக தலைவர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். திமுக வருகிற டிசம்பர் 29 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால் கொங்கு மண்டல அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில் திமுக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். அப்போது 2026 சட்டமன்ற தேர்தல் பணி, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
முக்கியமாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவுள்ள மகளிரணி மாநாடு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான பொறுப்பாளர்களில் ஒருவராக செந்தில் பாலாஜியும் உள்ளார்.
கோவை திமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி, "எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய பட்டியலின்படி, கோவையில் 25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் அனைத்து பூத்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் சரியாக இருக்கிறதா என்பதை நிர்வாகிகள் சரி பார்க்க வேண்டும் விடுபட்டு இருந்தால் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எமிக்க வேண்டும். இது நமக்கு இறுதி வாய்ப்பு. அதனால் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.
திமுக நிர்வாகிகள், பூத் பிரமுகர்கள், வீடு தோறும் சென்று பொதுமக்களிடம் அரசு திட்டங்களை எடுத்து சொல்ல வேண்டும். 29 ஆம் தேதி பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெறவுள்ளது. மகளிர் மாநாட்டில் மேற்கு மண்டலத்தில் உள்ள 39 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து அந்த மாநாட்டில்
1.50 லட்சம் மகளிர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
கோவை மாவட்டத்தில் இருந்து மட்டுமே 50,000 மகளிர் கலந்து கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு, ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளது. இதை கண்டித்து 24 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதிலும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்." என்றார்.
-
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி?












Click it and Unblock the Notifications