கோவை அருகே நரபலியா? தோட்டத்தில் கிடந்த எழும்பு கூடு.. வினோத பூஜையால் அதிர்ச்சி
கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஒரு தோட்டத்தில் எலும்புக் கூடுகள் கிடந்தன. கை, கால்கள், உடல்கள் எல்லாம் துண்டு துண்டாக கிடந்தன. ஆனால் அங்கு சடலத்தின் அருகே வழிபாடு செய்யப்பட்டுள்ளது. ரத்தத்தில் பூஜை நடந்ததற்கான தடயங்கள் உள்ளன.இதனால் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இதனிடையே கொல்லப்பட்ட உடலை கைப்பற்றிய போலீசார் யார் என்று விசாரணையை தொடங்கிஉள்ளனர். இதனிடையே உடல் ஆணா பெண்ணா அல்லது கோழியின் ரத்தமான என்பதை அறிய கல்லின் மேல் இருந்த ரத்த மாதிரிகளை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவனாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தினை நாமக்கல்லை சேர்ந்த வாழை விவசாயம் செய்து வருகிறார். குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும், நேற்று தோட்டத்தில் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது தோட்டத்தின் ஒரு பகுதியில், எலும்பு கூடுகள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி, சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி.பாலாஜி, காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், மேட்டுப்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், குறிப்பிட்ட தோட்டத்திற்கு விரைந்து வந்தனர்.
காவல்துறை அதிகாரிகள் நேரில்வந்து பார்த்த போது, அந்த தோட்டத்தில் சிதைந்த நிலையில் மனித சடலம் இருந்துள்ளது. மேலும் கை, கால், தலை மற்றும் உடல் பகுதிகள் அனைத்தும் துண்டு, துண்டாக அழுகிய நிலையில் அந்த பகுதியில் வீசப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் கோவையில் இருந்து மோப்பநாய் வீராவும் வரவழைத்தனர். மோப்பநாய் வீரா தோட்டத்தில் இருந்து சிறிது தூரம் விரட்டி சென்றது. ஆனால் யாரையும் பிடிக்கவில்லை. இதையடுத்து தடயவியல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து, சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகைகளை பதிவு செய்தனர்
இந்த மர்ம மரணம் தொடர்பாக, சந்தேக மரணம் என காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். தோட்டத்தில் மீட்கப்பட்ட உடல், ஆண் உடலா? பெண் உடலா? என்பதை கண்டுபிடிப்பதிலும் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது ஒருபுறம் எனில் போலீசார் தோட்டம் முழுவதும் சோதனை செய்த போது, உடல் கிடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு கல் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டதற்கான அடையாளங்களும் காணப்பட்டன.
அந்த கல்லை சுற்றிலும் விளக்குகளும் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த கல் முழுவதும் ரத்தக்கறையாகவும் காணப்பட்டது. இதனால் மர்மநபர், யாரையாவது அழைத்து வந்து நரபலி கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் கல்லில் இருந்த ரத்தம் மனித ரத்தமா? அல்லது கோழியின் ரத்தமா? என்பதிலும் போலீசாருக்கு குழப்பம் நிலவுகிறது.
இதையடுத்து கல்லின் உள்ள ரத்த மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்காக கோவையில் உள்ள பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவுகள் வந்த பின்னரே நரபலி கொடுக்கப்பட்டதா என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சமீபத்தில் காணாமல் போனவர்களின் தகவல்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர். காரமடை பகுதியில் பிணமாக கிடந்தவர் நரபலி கொடுக்கப்படடிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளால், அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications