கோவையில் பரபரப்பு.. கைக்குழந்தையுடன் திருடிய 4 பெண்கள்.. மக்களிடம் சிக்கி சரமாரி தர்ம அடி

ஓடும் பஸ்ஸில் நகை திருட முயன்ற 4 பெண்களை மக்கள் வெளுத்து எடுத்துவிட்டனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கைக்குழந்தையுடன் திருடிய 4 பெண்கள்.. மக்களிடம் சிக்கி சரமாரி தர்ம அடி

    கோவை: கலர் கலர் புடவையை கட்டிக் கொண்டு, கையில் ஒரு கைக்குழந்தையுடன் பஸ்ஸில் ஏறிய அந்த 4 பெண்களையும் பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து ஓட ஓட விரட்டி கும்மு கும்மென்று குமுறி எடுத்து விட்டார்கள்! கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    கோவை டவுன்ஹால் பகுதியில் இருந்து பேரூர் நோக்கி ஒரு பிரைவேட் பஸ் சென்றுள்ளது. அதில் நிறைய பயணிகள் உட்கார்ந்திருந்தனர்.

    அப்போது 4 பெண்கள் அந்த பஸ்ஸில் ஏறினார்கள். அவர்களிடம் ஒரு கைக்குழந்தையும் இருந்தது. கைக்குழந்தையை பார்த்ததும், அங்கு உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து 2 பெண்களுக்கு இடம் தந்தார்கள்.

    திருட முயற்சி

    திருட முயற்சி

    குழந்தையுடன் 2 பேர் சீட்டில் உட்கார்ந்து கொண்டனர். மற்ற 2 பேர் பக்கத்திலேயே நின்று கொண்டனர். பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது முன்பக்க சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் 4 பேருமே நகையை திருட நைசாக முயன்றுள்ளனர்.

    தப்பி ஓட்டம்

    தப்பி ஓட்டம்

    இதனை மற்ற பயணிகள் பார்த்து விட்டனர். ஆத்திரமும், கோபமும் அதிகமானதால் அவர்களை பஸ்சுக்குள்ளேயே பிடிக்க முயன்றனர். இதற்காக வைசியாள் வீதியில் பஸ் நிறுத்தப்பட்டது. அந்த சமயத்தில் இந்த 4 பெண்களும் பஸ்ஸிலிருந்து ஒரே ஜம்ப்பாக எகிறி குதித்து தப்பி ஓடினார்கள்.

    விரட்ட ஆரம்பித்தனர்

    விரட்ட ஆரம்பித்தனர்

    இதைபார்த்ததும் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும் பெண்களை விடவில்லையே... அவர்களும் பஸ்ஸில் இருந்து குதித்து அந்த பெண்கள் பின்னாடியே ஓடினார்கள். திருட்டு ஆளுங்க... அவங்களை பிடிங்க.. என்று பயணிகள் கத்தி கொண்டே ஓடினர். இதை கேட்ட ரோட்டில் சென்று கொண்டிருந்த பொதுமக்களும் 4 பேரை விரட்ட தொடங்கினார்கள்.

    சரமாரி அடி

    சரமாரி அடி

    பிறகு எல்லோருமே சேர்ந்து 4 பேரையும் மடக்கி பிடித்து சராமரியாக அடித்து உதைத்தனர். நடுரோட்டிலேயே அந்த பெண்களின் தலைமுடியை பிடித்துக் கொண்டு வெளுத்தது முக்கால்வாசி அந்த பகுதி பெண்கள்தான். கெத்தாக ஏறிய 4 பேரும் கொஞ்ச நேரத்திலேயே தலைமுடியெல்லாம் அவிழ்ந்து அலங்கோலமாகி விட்டனர்.

    போலீசில் ஒப்படைப்பு

    போலீசில் ஒப்படைப்பு

    அடி தாங்காமல் அந்த பெண்கள் அலறினார்கள். தகவலறிந்து கடை வீதி போலீசார் வந்தனர். அவர்களிடம் 4 பேரையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+