ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் கேட்டாரே.. ஒத்திவைத்த வழக்கில் இன்று மீண்டும் விசாரணை.. பரபரக்கும் கோவை
கோவை: யூடியூபா் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்..

அவதூறு: இதையடுத்து, தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.. அதேபோல, பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக முசிறி டிஎஸ்பி யாஸ்மின், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் அளிக்கப்பட்டது.
இதன்பேரில், யூடியூபர் சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இதையடுத்து சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு இருவருமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெலிக்ஸ்: பெலிக்ஸ் ஜெரால்டை மே 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில், கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். பின்னர், கடந்த பெலிக்ஸ் ஜெரால்ட்டை கோவை போலீசார் ஒரு நாள் காவல் எடுத்து விசாரணை மேற்கொண்டு மீண்டும் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பெலிக்ஸ் ஜெரால்ட் தரப்பில் ஜாமீன் கேட்டு கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மனு மீதான விசாரணை கடந்த திங்கட்கிழமை கோவை 4 வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபாபு, ஜாமீன் மனு மீதான விசாரணையை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சவுக்கு சங்கர்: அதேபோல, சவுக்கு சங்கர் ஜாமீன் மனுவும் விசாரணைக்கு வந்தது. இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 30-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தர்.. சவுக்கு சங்கர் சென்னை புழல் ஜெயிலிலும், பெலிக்ஸ் ஜெரால்ட் திருச்சி ஜெயிலிலும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications