ஜெயிலில் இருந்தபடியே ஐடியா அனுப்பிய செந்தில் பாலாஜி.. பெரிய கையை களமிறக்கிய ஸ்டாலின்.. அடிதூள் செம
கோவை: கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
லோக்சபா தேர்தல் பணிகளுக்காக திமுக வேகமாக தயாராகி வருகிறது. 2024 லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டு திமுக களப்பணிகளை செய்ய தொடங்கிவிட்டது. பிரச்சாரங்கள் இன்றில் இருந்து சூடு பிடிக்க தொடங்கிவிட்டது.

இந்த லோக்சபா தேர்தலில் கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் அங்கே திமுக எப்படி பணிகளை செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் வேலை: அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் திமுகவை ஜெயிக்க வைப்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறாராம்.
அதன்படி தன்னை சந்தித்த சிலர் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான தகவல் ஒன்றை அனுப்பி உள்ளாராம் செந்தில் பாலாஜி. அதில்.. கோவையில் நாம்தான் ஜெயிக்க வேண்டும். கோவையில் இந்த முறை திமுகவே நிற்கட்டும். இப்போது கூட்டணி கட்சியிடம் உள்ள இடம் திமுகவிற்கு வந்தால் நாம் ஜெயிக்கலாம்.
தேர்தல் பணிகளை எனக்கு நெருக்கமானவர்கள் பார்த்துக்கொள்வார்கள். திமுகவில் சரியாக இருக்கும் சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டு செந்தில் பாலாஜி தலைமைக்கு தகவல் அனுப்பி உள்ளாராம். கொங்கு அரசியலை கரைத்து குடித்தவர் என்பதால் செந்தில் பாலாஜியின் ஆலோசனைகளை திமுக பரிசீலனை செய்து வருகிறதாம்.
அவர் அப்படி சொன்னதன் அடிப்படையிலே கோவையில் இந்த முறை கூட்டணி கட்சியை களமிறக்காமல் திமுக வேட்பாளரை களமிறக்கி உள்ளனராம்.
கோவை தொகுதி: கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். முக்கியமாக டாக்டர் மகேந்திரன் உட்பட பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்தது. கடைசியில் கணபதி ராஜ்குமார் தேர்வாகி உள்ளார்.
கோவை முன்னாள் அதிமுக மேயர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் கணபதி ராஜ்குமார் ஆவார். 2020 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாநகரின் 5வது மேயராக 2011 - 16 வரை அதிமுகவை சேர்ந்த கணபதி பி.ராஜ்குமார் பதவி வகித்து வந்தார். அங்கே அதிமுகவின் டாப் தலைகளில் ஒருவராக இருந்தார்.
அதன்பின் 2020ல் கட்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு இடையே திமுகவிற்கு வந்தார். அங்கே திமுக வளர செந்தில் பாலாஜி எப்படி காரணமாக இருந்தாரோ அதேபோல் இவரும் முக்கியமான மாஸ்டர் மைண்டாக இருந்தார். இந்த நிலையில் அவரை திமுக வேட்பாளராக தேர்வு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications