SIR: வரைவு வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள்! கோவையில் அதிர்ச்சி! இதுக்கு பருத்தி மூட்டை..
கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் இருந்து 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்த நிலையில் கோவையில் இறந்த தம்பதியின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அவரது மகன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எஸ்ஐஆர் படிவத்தில் தாய், தந்தை இறந்துவிட்டதை குறிப்பிட்டு அவர்களது பெயர்களை நீக்கக் கோரியும் இருவரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியாக இருப்பதாக கோவையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தெரிவித்துள்ளார்.

சிவகுமாரின் தந்தை சென்னியப்பன் (84). இவரது தாய் சரோஜா (78). இவர்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2015 ஆம் ஆண்டு சென்னியப்பன் இறந்துவிட்டார். பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு சரோஜாவும் இறந்துவிட்டாராம்.
இவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க இவர்களது மகன் சிவகுமார், எஸ்ஐஆர் படிவத்தில் விவரங்களை தெரிவித்திருந்தாராம். ஆனால் கடந்த 19ஆம் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தனது ஆதங்கத்தை அவர் கொட்டி தீர்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எங்கள் வீட்டிற்கு வந்த பிஎல்ஓ பெண் அதிகாரிக்கு எதுவுமே தெரியவில்லை. உறவினர் என்றால் அப்பா அம்மா பெயரை போடணும். ரத்த சொந்தங்களின் பெயர்களை போடணும்னு சொன்னேன்.
ஒரு லிஸ்ட்டை கொடுத்து இதில் பெயர் இருக்கிறதா என பார்த்துக்கோங்க என மட்டும் அந்த பெண் சொன்னார், அதை தவிர்த்து அவருக்கு வேறு எதுவுமே தெரியவில்லை.
என் அப்பா இறந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. அம்மா இறந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. அப்பா இறந்த போதிலிருந்தே அவர் இறந்ததை நாங்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் அவரது பெயர் நீக்கப்படாமல் இருந்தது.
எஸ்ஐஆர் படிவங்களை நிரப்ப வந்த பிஎல்ஓ அதிகாரியிடம் கூட அப்பா, அம்மா இல்லை என்பதை சொன்னேன். அதற்கு அவர்கள் எஸ்ஐஆர் படிவத்தை கொடுக்கவில்லை. உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்றார்.
இதனால் நான், என் மனைவி, என் மகள் ஆகியோரின் தகவல்களை மட்டும் வாங்கிக் கொண்டார். எங்களது பெயர்கள் சரியாக வரைவு வாக்காளர்கள் பட்டியலில் வந்துவிட்டது. ஆனால் அப்பா அம்மாவின் பெயர்கள் தற்போது வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமல் அப்படியே வந்திருக்கிறது. என் கண் முன்னால்தான் அந்த பிஎல்ஓ அதிகாரி, என் அப்பா, அம்மா பெயரை நீக்குவதற்காக எழுதி வைத்திருந்தார். ஆனாலும் பட்டியலில் வந்துவிட்டது.
இது போக எனக்கு யாரென்றே தெரியாத ஒரு நபர் எங்கள் வீட்டில் குடியிருப்பது போல் முகவரி காட்டுகிறது. இது போன்ற குளறுபடிகள் ஏகப்பட்டது இருக்கும் போல! எங்களுக்கு தெரிந்த ஒருவருக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும். அவரது பெயர் இருக்கிறது, ஆனால் அவரது மனைவி பெயர் இல்லை. இந்த வயதில் நான் என் மனைவி பெயரை சேர்க்க அலையணுமே என வருந்தினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்து கடந்த 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது. இறந்தவர்களின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருப்பதால்தான் எஸ்ஐஆர் பணிகள் தொடங்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது இறந்தவர்களின் பெயர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications